ஆற்றில் குதித்த திருடர்களைப் படகில் சென்று விரட்டிப் பிடித்த காவலர்கள்

ஆற்றில் குதித்த திருடர்களைப் படகில் சென்று விரட்டிப் பிடித்த காவலர்கள்

2 mins read
4d967375-865a-4d34-a6d2-8f2a6dc70380
-

சிதம்­ப­ரம்: சிதம்­ப­ரத்­தைச் சேர்ந்­த­வர் வாசு. இவ­ரது மனைவி ஜெயந்தி மா.அரசு கிரா­மத்­துக்கு இரு சக்­கர வாக­னத்­தில் சென்­று­கொண்­டி­ருந்­தார். அப்­போது, மேல­ப­ருத்­திக்­குடி அருகே சென்­ற­போது பின்­னால் இரு சக்­கர வாக­னத்­தில் வந்த சந்­தே­கப் பேர்­வ­ழி­கள், ஜெயந்­தி­யின் கழுத்­தில் கிடந்த தாலிச் சங்­கி­லி­யைப் பறிக்க முயன்­ற­னர்.

சுதா­ரித்­துக்­கொண்ட ஜெயந்தி தனது வாக­னத்தை நிறுத்­தி­விட்டு, தாலிச் சங்­கி­லி­யைக் கெட்­டி­யா­கப் பிடித்­துக்­கொண்டு உதவி கோரி கத்­தி­னார்.

அக்­கம்­பக்­கத்­தில் இருந்­த­வர்­கள் ஓடி­வந்­த­தும் திரு­டர்­கள் சங்­கி­லி­யைப் பறிப்­பதை விட்­டு­விட்டு அங்­கி­ருந்து தப்­பிச்­சென்­ற­னர்.

பொது­மக்­களில் சிலர் இரு சக்­கர வாக­னத்­தில் திரு­டர்­களை விரட்­டி­னர். காவ­லர்­க­ளுக்­கும் இந்த தக­வல் போனது.

மக்­களும் காவ­லர்­களும் விரட்டு வதைப் பார்த்து அச்­ச­ம­டைந்த திரு­டர்­கள் குறு­வக்­குடி கிரா­மத்­தில் இரு­சக்­கர வாக­னத்­தைப் போட்டு விட்டு ஆற்­றில் குதித்து தப்ப நினைத்தனர். காவ­லர்­கள் திரு­டர்­களை விட­ாமல் பட­கில் துரத்தி­­னர்.

ஒரு திரு­டனை நடு ஆற்­றி­லேயே பிடித்த பொது­மக்­கள் அவ­ருக்கு தர்ம அடி கொடுத்­த­னர்.

மற்­றொரு திரு­ட­னைப் பிடிக்­கும் படி எதிர்­க­ரை­யில் உள்ள கிரா­மத்தைச் சேர்ந்த சில­ருக்கு காவல் ஆய்­வா­ளர் அமுதா கைபேசி வழி தக­வல் கொடுத்­தார்.

மறு கரை­யில் நின்­றி­ருந்த மக்­கள் இரண்­டா­வது திரு­டனை மடக்­கிப் பிடித்­த­னர்.

சங்­கி­லி­யைப் பறிக்க முயன்ற வர்­கள் சீர்­கா­ழி­யைச் சேர்ந்த ஜவ­ஹர், 22, நாகை­யைச் சேர்ந்த கண்­ணன், 27, என்­பது தெரி­ய­வந்­தது. இரு­வ­ரை­யும் காவ­லர்­கள் கைது செய்து சிறை­யில் அடைத்­த­னர்.

சம­யோ­சி­த­மா­க­வும் துரி­த­மா­க­வும் செயல்­பட்ட அமு­தாவை காவல் அதி­கா­ரி­களும் ­மக்­களும் பாராட்­டி­னர்.