சென்னை: மல்லிகைப் பூக்களில் மதுரை மல்லிக்கு என்று ஒரு தனி மதிப்பு உண்டு. அதாவது இந்த மல்லிகையானது மற்ற மல்லிகைப்பூக்களைவிட அதிக வாசனை கொண்டது.
இத்தகைய சிறப்புமிக்க மதுரை மல்லிகை பூவிற்கு ஏற்கெனவே புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில், மத்திய அரசின் பதப்படுத்தப் பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணை யம் ஏற்பாட்டில், மதுரை மல்லி நேற்று முன்தினம் (செப்.20) முதல் ஓமான் தலைநகர் மஸ்கட் நகருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், 500 கிலோ மதுரை மல்லி, பாரம்பரிய மலர்களான முல்லை, பிச்சிப்பூ, பட்டன் ரோஜா, சாமந்தி, துளசி, மருக்கொழுந்து, தாமரை, பன்னீர் ரோஜா, அல்லி ஆகியவையும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

