கோவை: கோவையில் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட ஆடவர் ஒருவரின் தலையைக் கண்டுபிடிக்க முடியாமல், குப்பைத் தொட்டியில் கிடைத்த ஒரு கையை மட்டும் வைத்து குற்றவாளிகளைக் காவலர்கள் அடையாளம் கண்டு பிடித்து, கைது செய்துள்ளனர்.
கோவையில் கடந்த வாரம் அழகு நிலைய ஊழியரான பிரபு என்பவர் கொல்லப்பட்ட நிலையில், எட்டு தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் பிரபுவின் காதலி கவிதா, திவாகர், கார்த்திக் ஆகிய மூவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து கோவையின் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் கூறு கையில், "பொதுவாக இதுபோன்ற காட்சிகளை நாம் திரைப்படங்களில் தான் பார்க்கமுடியும்.
"கொலை வழக்குகளில் தலைப் பாகம் கிடைத்தால்தான் குற்றவாளி களை நெருங்கமுடியும். ஆனால், இந்தச் சம்பவத்தில் கிடைத்த ஒரு கையை மட்டும் வைத்து துப்பு துலக்குவதற்கு மிகவும் சவாலாக இருந்தது.
"விசாரணையின்போது, துடிய லூர் சந்தை அருகே இருந்த ஒரு கிணற்றுக்குள் தீயணைப்புத் துறை யினர் கயிற்றைக் கட்டி இறங்கி உடல்பாகங்களைக் கைப்பற்றினர்.
"காவலர்களிடம் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக பிரபுவின் உடலை 12 துண்டுகளாக வெட்டி, குப்பைத் தொட்டி, கிணறு, சாக்கடை என பல்வேறு பகுதி களிலும் வீசியுள்ளனர்.
"தன் கணவரைக் காணவில்லை என்று பிரபுவின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, பிரபுவுக்கு வேண்டப்பட்ட வர்கள் குறித்து விசாரித்தோம்.
"அப்போது, கவிதா என்பவரை யும் அவருக்கு வேண்டிய திவாகர் என்பவரையும் சந்தேகத்தின்பேரில் விசாரித்ததில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்," என்று ஐஜி சுதாகர் கூறியுள்ளார்.
பிரபுவிற்கு ஒரு சில பெண் களுடன் முறையற்ற உறவு இருந்து வந்ததும் காவலர்களின் விசாரணை யில் தெரியவந்துள்ளது.

