சென்னை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 வகையான விளையாட்டுகள் இந்த ஆண்டுமுதல் அறிமுகப் படுத்தப்பட உள்ளன.
இதற்காக உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பள்ளிக் கல்வி ஆணையகத்தின் இணை இயக்குநர் அமுதவல்லி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஆறாம் வகுப்பு முதல் 'பிளஸ் 2' வரை படிக்கும் மாணவர்களுக்கு கடற்கரை கைப்பந்து, குத்துச்சண்டை, சுண்டாட்டம், சிலம்பம், வாள் சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், ஜூடோ, டேக்வாண்டோ, ஸ்குவாஷ், வலைப்பந்து ஆகிய 10 வகை விளையாட்டுகளை அறிமுகப்படுத்த வேண்டும். இதற்காக, 38 மாவட்டங் களிலும் 760 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வரும் 28 முதல் 30ஆம் தேதி வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

