தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

600 பேர் கொண்ட குழுவை அமைத்து தடுப்பு நடவடிக்கை தீவிரம் காய்ச்சலைத் தடுக்க அமைச்சர்கள் குழு

2 mins read
708a5b2a-a12e-4d8d-adda-9b60d9c89fe2
-

சென்னை: தமிழகத்தில் சாதாரண சளிக்காய்ச்சல் முதல் எச்1என்1 காய்ச்சல் வரை பலவிதமான காய்ச்சல்களும் ேவகமாகப் பரவி வருகின்றன.

இந்தக் காய்ச்சலின் தீவிரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மூன்று அமைச்சர்கள் தலைமையில் 600 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்த மல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, "பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்பு ஆங்காங்கே அதிகரித்து வருகிறது.

"இந்தப் பாதிப்புகள் முழுமை யாகக் குறையும்வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும்.

"மாநிலம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் துறை, ஊரக உள்ளாட் சித் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய மூன்று துறைகளைச் சேர்ந்த அமைச்சர்களின் தலைமை யில் 600க்கும் மேற்பட்ட அலுவலர் கள் கொண்ட ஒருங்கிணைந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

"இந்தக் குழுவினர் காய்ச்சலைக் கட்டுப்படுத்த துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

"அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரகப் பகுதிகள்தோறும் 388 நடமாடும் மருத்துவக் குழுவினர் நேரில் சென்று மருத்துவச் சிகிச் சைகளை வழங்க உள்ளனர்," என்றார்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ கத்தில் 509 பேருக்கு கொவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எச்1என்1 காய்ச்சலுக்கு 353 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற னர். இந்தக் காய்ச்சல் பாதிப்பு மூன்று நாள்களில் சரியாகிவிடும் என்று மா.சுப்பிரமணியன் கூறினார்.

மதுரை மாவட்டத்தில் கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது கொவிட்-19, டெங்கி, எச்1என்1 காய்ச்சல் பரவல் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. கொரோனாவைப் போல் எச்1என்1 காய்ச்சலும் மூச்சுத் திணறலை ஏற்படுத்துவதால் உயிர் வாயு படுக்கைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "மாணவர்களுக்கு வரும் காய்ச்சல் மூன்று நாள்களில் சரியாகிவிடுவதால், பள்ளிகளுக்கு விடுமுறை விடத் தேவையில்லை," எனக் கூறியுள்ளார்.