பரம்பிக்குளம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பரம்பிக்குளம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

1 mins read
12d46cec-61e3-4533-8105-e5a686c56689
பரம்பிக்குளம் அணையில் சீரமைப்புப் பணிகளைத் தொடங்க பத்து நாள்கள் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. படம்: இணையம் -

பரம்­பிக்­கு­ளம்: பொள்­ளாச்­சிக்கு அருகே உள்ள பரம்­பிக்­கு­ளம் அணை­யின் மதகு சேத­ம­டைந்­த­தால் அணை­யில் இருந்து தண்­ணீர் வேக­மாக வெளி­யே­றி­வ­ரு­கிறது.

இதனை­ய­டுத்து பாது­காப்பு கருதி அணை­யின் மற்ற இரண்டு மத­கு­களும் உட­ன­டி­யாக திறக்­கப்­பட்­ட­தா­க­வும் இத­னால் விநா­டிக்கு 20,000 கன அடி தண்­ணீர் வெளி­யேறி வீணா­வ­தா­க­வும் தெரி­கிறது.

பரம்­பிக்­கு­ளம் அணை 72 அடி உய­ரம் கொண்­டது. கேரள மாநி­லம் பாலக்­காடு மாவட்­டத்­தில் உள்ள இந்த அணை தமிழ்­நாடு பொதுப்­ப­ணித்­து­றை­யின் கட்­டுப்­பாட்­டில் உள்­ளது.

மதகு உடைந்த தக­வல் அறிந்து தமிழக நீர்ப்­பா­சனத் துறை அமைச்­சர் துரை­மு­ரு­கன், அமைச்­சர் செந்­தில் பாலாஜி, நீர்ப்பாசனத் துறைச் செய­லா­ளர் சந்­திப் சக்­சேனா உள்­ளிட்­டோர் சம்­பவ இடத்தை நேரில் பார்­வை­யிட்­ட­னர். அணை­யில் மதகு உடைந்து தண்­ணீர் வீணா­வது வேதனை அளிப்­ப­தாக அமைச்­சர் துரை­மு­ரு­கன் தெரி­வித்­தார். மேலும் முதல்­வ­ரி­டம் இது­பற்­றிக் கலந்­தா­லோ­சித்து போர்க்­கால அடிப்­ப­டை­யில் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அவர் உறு­தி­ய­ளித்­தார்.

மூன்று மத­கு­களும் திறந்­து­விடப்­பட்­ட­தால் சாலக்­குடி ஆற்­றில் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்ள நிலை­யில், கரை­யோர மக்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

அணை­யில் 27 அடிக்­கு­ மேல் அதா­வது 45 அடி வரை தண்­ணீர் வடிந்­தால்­தான் சீர­மைப்­புப் பணி­களைத் தொடங்க முடி­யும். அதற்கு இன்­னும் பத்து நாள் ஆக­லாம் என்று கரு­தப்­ப­டு­கிறது.

மிக அதி­க­மான தண்­ணீர் வீணா­வ­தால் இந்த ஆண்டு பாச­னம் பாதிக்­கக்­கூ­டும் என்ற கவலை எழுந்­துள்­ளது. ஆனால் மற்ற அணை­கள் நிரம்பி இருப்­ப­தால் தண்­ணீர்ப் பற்­றாக்­குறை ஏற்­ப­டா­மல் சமா­ளிக்க அதி­கா­ரி­கள் திட்­ட­மிட்டு வருகின்றனர்.