கம்பத்தில் பயங்கரவாதத் தொடர்பு சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

கம்பத்தில் பயங்கரவாதத் தொடர்பு சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

2 mins read
c6249806-34fc-4525-96f2-0b47c1f0dd0d
-

கம்­பம்: தேசிய புல­னாய்­வுப் பிரிவு அதி­கா­ரி­கள், தேனி மாவட்­டம் கம்­பத்­தில் நடத்­திய விசா­ரணை யில், ஆந்­தி­ரப் பிர­தே­சம், தெலுங்­கானா ஆகிய மாநி­லங்­களில் பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளு­டன் தொடர்­பு­டைய சந்­தே­கத்­தின்­பே­ரில் யாசர் அரபாத் என்­ப­வரை நேற்று அதி­காலை கைது­செய்­த­னர்.

தமிழ்­நாட்­டில் 16 இடங்­களில் தேசிய புல­னாய்வு முகமை அதி­கா­ரி­கள் சோதனை நடத்­தி­னர். இதில், ஆந்­தி­ரப் பிர­தே­சம், தெலுங்­கானா ஆகிய மாநி­லங்­களில் குண்டு வெடிப்பு, தீவி­ர­வா­தப் பயிற்சி ஆகி­ய­வற்­றில் ஈடு­படும் அமைப்­பு­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் தமி­ழ­கத்­தி­லும் இருப்­ப­தா­கத் தெரி­ய­வந்­தது.

இதன் அடிப்­ப­டை­யில், 'பாப்­பு­லர் ஃப்ரண்ட் ஆஃப் இந்­தியா' அமைப்­பின் மது­ரைப் பகுதி நிர்­வா­கி­யான 38 வயது யாசர் அரபாத்தின் வீட்­டில் அதி­கா­ரி­கள் சோதனை நடத்­தி­னர்.

வீட்­டில் உறங்­கிக்­கொண்­டி­ருந்த யாசர் அரா­பத்தை எழுப்பி விசா­ரணை நடத்­தி­னர். அதில் கணி­னி­யில் தக­வல்­க­ளைச் சேமிக்க உத­வும் கரு­வி­கள், விலை உயர்ந்த இரண்டு கைத்­தொ­லை­பே­சி­கள், 'பாப்­பு­லர் ஃப்ரண்ட் ஆஃப் இந்­தியா' அமைப்­பின் அறிக்­கை­கள், துண்­டுப் பிர­சு­ரங்­கள் ஆகி­ய­வற்­றைக் கைப்­பற்­றி­ய­து­டன் யாசர் அரபாத்­தைக் கைது­செய்­த­னர்.

தக­வல் கேள்­விப்­பட்­ட­தும் இஸ்­லா­மிய அமைப்­பு­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் கம்­பம் வடக்கு காவல் நிலை­யம் முன்பு தரை­யில் அமர்ந்து போராட்­டம் நடத்­தி­னர். யாசர் அரபாத்தை விடு­தலை செய்­யக்­கோ­ரிக் குர­லெ­ழுப்­பி­னர். அதி­கா­ரி­க­ளு­டன் பேச்­சு­வார்த்தை நடத்த மறுத்­த­தால் இந்த ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் 41 பேரைக் கைது­செய்ய நேரிட்­ட­தாக அதிகாரிகள் கூறி­னர்.

முத்­து­தே­வன்­பட்­டி­யில் உள்ள அறி­வ­கம் எனப்­படும் இஸ்­லா­மிய ஆராய்ச்சி மையத்­தி­லும் சோதனை நடத்தி சில பொருள்­க­ளைக் கைப்­பற்­றி­ய­தா­கக் காவல்­து­றை­யி­னர் கூறி­னர்.

நேற்று, தென்காசி, நெல்லை, திண்டுக்கல், ராமநாதபுரம், மதுரை, தேனி, கோவை, கடலூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடந்த இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.