ஆய்வு: வடக்கை விட தென்னிந்தியா சிறந்த செயல்பாடு

ஆய்வு: வடக்கை விட தென்னிந்தியா சிறந்த செயல்பாடு

1 mins read
c4868436-9308-45c6-a4fe-23f5fe40e11e
-

புது­டெல்லி: சுகா­தா­ரம், கல்வி, பொரு­ளி­யல் வாய்ப்­பு­கள் ஆகி­ய­வற்­றில் வட இந்­தி­யா­வைக் காட்­டி­லும் தென்­னிந்­தியா சிறப்­பாக இருப்­ப­தாக அண்மை ஆய்­வில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தென்­னிந்­திய மாநி­லங்­களில் பிறக்­கும் குழந்­தை­கள் வட மாநிலக் குழந்­தை­க­ளை­விட ஆரோக்­கி­ய­மான, வள­மான, கூடு­தல் பாது­காப்­பான வாழ்க்­கையை வாழ்­வ­தாக ஆய்வு கூறு­கிறது.

விடு­தலை பெற்­ற­போது குறை­வான வளர்ச்சி பெற்­றி­ருந்த தென்­னிந்­திய மாநி­லங்­கள் 1980களுக்­குப் பிறகு மேம்­பாடு கண்­ட­தாக ஆய்வு சொன்னது. இருப்­பி­னும் வட இந்­திய மாநி­லங்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் தென்­னிந்­தி­யா­வில் மக்­கள்­தொகை உயர்வு குறை­வா­கவே பதி­வானதாகக் கூறப்பட்டது.