‘மிஸ் சென்னை திருநங்கை’ அழகிப் போட்டி

சென்னை: திரு­நங்­கை­க­ளின் முப்­பெ­ரும் விழா 2022, அடுத்த மாதம் சென்னை கலை­வா­ணர் அரங்­கில் நடை­பெ­ற­வி­ருக்­கிறது. அதை முன்­னிட்டு, அந்­நி­கழ்ச்­சி­யின் ஓர் அங்­க­மான ‘மிஸ் சென்னை திரு­நங்கை’ அழ­கிப்­போட்­டிக்­கான தேர்வு, சென்னை கீழ்ப்­பாக்­கம் டான்­பாஸ்கோ கல்­லூரி வளா­கத்­தில் நடை­பெற்­றது.

மூன்று நாள்­கள் நடை­பெ­றும் திரு­நங்­கை­க­ளின் முப்­பெ­ரும் விழா­வின் முதல் நாளான அடுத்த மாதம் 13ஆம் தேதி, கல்­வி­யி­லும் வேலை வாய்ப்­பி­லும் திரு­நங்­கை­க­ளுக்­கான முக்­கி­யத்­து­வம் குறித்த நிகழ்ச்சி இடம்­பெ­றும்.

அக்­டோ­பர் 14ஆம் தேதி திரு­நங்­கை­கள் பாலின மாற்­றத்­திற்கு மேற்­கொள்­ளும் மருத்­துவ சிகிச்­சை­கள், அதற்­கான உத­வி­கள் ஆகி­யவை குறித்த கருத்­த­ரங்­கத்­திற்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இறுதி நாளான அடுத்த மாதம் 15ஆம் தேதி, அழ­கிப் போட்­டி­யின் இறு­திச் சுற்று நடை­பெ­றும். இதற்­கான தேர்­வுச் சுற்­றில் நேற்று முன்­தி­னம், தமி­ழ­கத்­தின் பல்­வேறு பகு­தி­க­ளைச் சேர்ந்த 22 திரு­நங்­கை­கள் கலந்­து­கொண்­ட­னர். இவர்­களில் 12 பேர் இறு­திச் சுற்­றுக்­குத் தேர்­வு­செய்­யப்­பட்­ட­னர்.

‘மிஸ் சென்னை திரு­நங்கை’ இறு­திப் போட்­டி­யில் வெற்றிபெறும் மூவ­ருக்கு வெற்றி பெற்­ற­தற்­கான சான்­றி­த­ழோடு மிஸ் சென்னை திரு­நங்கை பட்­ட­மும் வழங்­கப்­படும்.

இந்­நி­கழ்ச்சி, மூன்­றாம் பாலி­னத்­த­வர்­மீ­தான சமூ­கத்­தின் பார்­வையை மாற்­ற­வும் அவர்­கள் சமூ­கத்­தில் இயல்­பா­கக் கலந்து பழ­க­வும் உத­வும் என்று நம்­பப்­ப­டு­கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!