நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கணியாகுளம் பாறையடி எனும் ஊரைச் சேர்ந்தவர் மகேஷ். 54 வயதாகும் இவர் ஒரு காலை இழந்தவர்.
இளையர்கள் தன்னம்பிக்கை, மன உறுதி ஆகியவ பண்புகளுடன் வாழ்வில் முன்னேற முயலவேண்டும் என்பதை வலியுறுத்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை விழிப்புணர்வு மிதிவண்டியில் பயணம் மேற்கொண்டார் மகேஷ்.
கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருந்து இவரது சாதனைப் பயணத்தை மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
அன்றாடம் சராசரியாக 100 கிலோமீட்டர் எனும் அளவில் மிதிவண்டி ஓட்டிய இவர் வெற்றிகரமாக ஜம்மு சென்றடைந்தார். அதன்பிறகு ரயில் மூலம் நாகர்கோவில் திரும்பினார்.

