சென்னையில் பரவும் காய்ச்சல்; முகாம்கள் அதிகரிப்பு

சென்னையில் பரவும் காய்ச்சல்; முகாம்கள் அதிகரிப்பு

1 mins read
a13c9bc0-bc48-45a6-9422-29190a30d129
-

சென்னை: சென்­னை­யில் சளிக்­காய்ச்­சல் பர­வு­வ­தால் சிகிச்சை முகாம்­களும் அதி­க­ரிக்­கப்­ப­டு­கின்­றன. மேலும் தொடர்ந்து காய்ச்­சல் இருந்­தால் கொரோனா பரி­சோ­தனை செய்­து­கொள்­ளும்­படி மாந­க­ராட்சி கேட்­டுக் கொண்­டுள்­ளது.

தமி­ழ­கம் முழு­வ­தும் 'இன்­பு­ளூ­யன்சா' காய்ச்­சல் வேக­மாக பரவி வரு­கிறது. இதை கட்­டுப்­ப­டுத்த நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் ஆயி­ரம் மருத்­துவ முகாம்­கள் நடத்­தப்­பட்­டன. இதில் சென்னை மாந­க­ராட்சி பகு­தி­யில் மட்­டும் 100 முகாம்­கள் நடத்­தப்­பட்­டன.

இந்த முகாம்­களில் 6,860 பேருக்கு மருத்­துவ பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது. அவர்­களில் 1,798 பேர் காய்ச்­சல் அறி­கு­றி­யு­டன் இருந்­த­னர். அவர்­க­ளுக்கு 'பார­சிட மால்' வலி மாத்­திரை வழங்­கப்­பட்­டது. இந்த நிலை­யில் காய்ச்­சல் தாக்­கம் அதி­க­ரித்­துள்­ள­தால் சென்­னை­யில் நேற்று கூடு­த­லான மருத்­துவ முகாம்­கள் நடத்த மாந­க­ராட்சி ஏற்­பாடு செய்­தது. எல்லா முகாம் களி­லும் மருத்­து­வர்­கள், தாதியர்கள் இருப்­பார்­கள் என தெரிவிக்­கப் ­பட்­டது. பரி­சோ­த­னை­யில் காய்ச்­சல் இருப்­பது உறு­தி­யா­னால் அவர்­கள் அரு­கில் உள்ள மருத்­துவ மனைக்கு அனுப்பி வைக்கப்படு கின்றனர். இந்த சாதா­ரண காய்ச்­ச­லுக்­கும் கொரோ­னா­வுக்­கான அறி­கு­றி­களே காணப்­ப­டு­கிறது. எனவே தொடர்ந்து காய்ச்­சல் இருந்­தால் கொரோனா பரி­சோ­தனை செய்து கொள்­ளும்­படி மாநகராட்சி கேட்­டுக் கொண்­டுள்­ளது.