15 ஆண்டுகளுக்கு பிறகு அதிகாரிகளிடம் சிக்கினார்

15 ஆண்டுகளுக்கு பிறகு அதிகாரிகளிடம் சிக்கினார்

1 mins read
18042baa-16c9-49e6-946b-2736710a41f8
-

சென்னை: வர­தட்­சணை கொடுமை வழக்­கில் காவ­லர்­க­ளால் தேடப்­பட்ட நபர் 15 ஆண்டு­க­ளுக்­குப் பிறகு சிக்­கி­யுள்­ளார்.

சென்னை மீனம்­பாக்­கம் அனைத்­து­லக விமான நிலை­யத்­துக்கு கத்­தா­ரில் இருந்து விமா­னம் ஒன்று வந்­தது.

அதில் வந்த பய­ணி­க­ளின் ஆவ­ணங்­களை குடி­யு­ரிமை அதி­கா­ரி­கள் சோதனை செய்­த­னர்.

அப்­போது திருச்­சியை சேர்ந்த ராம­லிங்­கம், 46, என்­ப­வர் நைஜீ­ரியா நாட்­டில் இருந்து கத்­தார் வழி­யாக சென்னை வந்­தி­ருந்­தார்.

அவ­ரது பாஸ்­போர்ட்டை ஆய்வு செய்­த­போது கட­லூர் மாவட்­டம் திட்­டக்­குடி அனைத்து மக­ளிர் காவல் நிலை­யத்­தில் கடந்த 2007ஆம் ஆண்டு அவ­ரு­டைய மனை­வியை வர­தட்­சணை கேட்டு கொடுமை செய்­த­தால் அவர் இறந்­த­தா­க­வும் இத­னால் ராம­லிங்­கம் மீது காவல்­து­றை­யி­னர் வழக்­குப்­ப­திவு செய்து கடந்த 15 ஆண்­டு­க­ளாக அவரை தேடி வரு­வ­தும் தெரிந்­தது.

இதை­ய­டுத்து ராம­லிங்­கத்தை அதி­கா­ரி­கள் தனி அறை­யில் தங்க வைத்­த­னர். உடனே இது பற்றி திட்­டக்­குடி காவல் நிலை­யத்­துக்கு தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது.