எய்ம்ஸ் கட்டடம் காணவில்லை என புகார்

எய்ம்ஸ் கட்டடம் காணவில்லை என புகார்

1 mins read
b68dda53-da8d-4a2b-97b5-0bd850d25836
-

சென்னை: எய்ம்ஸ் கட்­ட­டத்­தைக் காண­வில்லை என்று விரு­து­ந­கர் எம்.பி மாணிக்­கம் தாக்­கூ­ரும் மதுரை எம்.பி. சு.வெங்­க­டே­ச­னும் தெரி­வித்­துள்­ள­னர்.

மது­ரை­யில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் பேசிய பா,ஜனதா தேசி­யத் தலை­வர் ஜே.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்­து­வ­மனை கட்­டு­மானப் பணி­கள் 95 விழுக்­காடு முடிந்துவிட்­டது. எய்ம்ஸ் மருத்­துவக் கல்­லூ­ரி­யில் மாண­வர் சேர்க்­கைக்­கான இடங்­களும் நூறி­லி­ருந்து, இரு­நூற்று ஐம்­ப­தாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது என்று தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்த நிலை­யில் 95 விழுக்­காடு பணி முடிந்த எய்ம்ஸ் கட்­ட­டத்தை யாரோ திருடி விட்­டார்­கள் என்று எம்.பி.மாணிக்­கம் தாகூர் தெரி­வித்­தார்.

இது குறித்து வெளி­யிட்ட டுவிட்­டர் பதி­வில், " மதுரை எய்ம்ஸ் பணி­களை 95 விழுக்­காடு முடித்த ஜே.பி. நட்­டா­விற்கு நன்றி. நானும், மதுரை எம்.பியும் தோப்­பூ­ரில் ஒரு மணி நேரம் தேடி­யும் எது­வும் கிடைக்­க­வில்லை. கட்­ட­டத்தை யாரோ திரு­டி­விட்­டார்­கள்," என்று மாணிக்­கம் தாகூர் தெரி­வித்­துள்­ளார்.