சிக்கியது 10 டன் போதைப்பொருள்

சிக்கியது 10 டன் போதைப்பொருள்

2 mins read
a2fd5f1a-3f8c-4b9b-9275-dbc5f44631ee
-

மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பல் மூலம் கடத்தல்

தூத்­துக்­குடி: மலே­சி­யா­வில் இருந்து கப்­பல் மூலம் கடத்தி வரப்­பட்ட பத்து டன் போதைப்­பொ­ருளை மத்திய புல­னாய்­வுப் பிரிவு அதிகாரி­கள் பறி­மு­தல் செய்­த­னர்.

தூத்­துக்­குடி துறை­மு­கத்­தில் அதி­ரடி சோதனை மேற்­கொண்­ட­போது 'பாப்பி சீட்' என்று குறிப்­பி­டப்­படும் தடை செய்­யப்­பட்ட போதைப்­பொ­ருள் மூட்டை மூட்டை­யாக சிக்­கி­யது.

இதன் அனைத்­து­ல­கச் சந்தை மதிப்பு ரூ.1.70 கோடி என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மலே­சி­யா­வில் இருந்து கப்­பல் மூலம் பல்­வேறு பொருள்­கள் தூத்துக்­குடி துறை­மு­கத்­திற்கு கொண்டு வரப்­ப­டு­கின்­றன.

இந்­நி­லை­யில், 'ஒயிட் சிமெண்ட்' எனப்­படும் மூலப்­பொ­ருள் இறக்­கு­மதி செய்­யப்­ப­டும்­போது, அத­னு­டன் 'பாப்பி சீட்' என்ற போதைப்­பொ­ரு­ளும் கடத்தி வரப்­ப­டு­வ­தாக மத்­திய புல­னாய்வுப் பிரிவு அதி­கா­ரி­க­ளுக்கு ரக­சிய தக­வல் கிடைத்­தது.

அதன்­பே­ரில் நேற்று முன்­தி­னம் தூத்­துக்­குடி துறை­மு­கத்தை வந்­தடைந்த ஒரு கப்­பலை அதி­கா­ரி­கள் கண்­கா­ணிப்பு வளை­யத்­துக்­குள் கொண்டு வந்­தனர். கப்­பல் கரைக்கு வந்த உட­னேயே அதில் ஏறி முழுமை­யாக சோத­னை­யிட்டனர்.

அப்­போது நூற்­றுக்­கும் மேற்­பட்ட மூட்­டை­களில் பத்து டன் எடை­கொண்ட 'பாப்பி சீட்' போதைப்­பொ­ருள் இருப்பது தெரி­ய­வந்­தது.

உலக அள­வில் துருக்கி, கிர்­கிஸ்­தான் உள்­ளிட்ட நான்கு நாடு­கள் மட்­டுமே இந்­தப் போதைப்­பொ­ருளை குடி­மக்­கள் பயன்­ப­டுத்த அனு­மதி அளித்­துள்­ள­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

இதை­ய­டுத்து கடத்தி வரப்­பட்ட போதைப்­பொ­ருள் ஆய்­வுக்கு அனுப்­பப்­பட்­ட­து­டன், அதை இறக்­கு­மதி செய்­தது யார் எனும் விசா­ரணை தொடங்கி உள்­ளது.

பல்­வேறு நாடு­களில் இருந்து தமி­ழ­கத்­துக்கு விமா­னம் மூலம் தங்­கம் கடத்தி வரப்­ப­டு­கிறது. இத­னால் விமான நிலை­யங்­களில் கண்­கா­ணிப்பு தீவி­ர­ம­டைந்­துள்­ளது.

பல்­வேறு நூதன முறை­க­ளைப் பயன்­ப­டுத்தி கடத்தி வரப்­படும் தங்­கத்தை விமான நிலைய சுங்­கத்­துறை அதி­கா­ரி­கள் எப்­ப­டி­யா­வது கண்­டு­பி­டித்து பறி­மு­தல் செய்­து­விடு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் கப்­பல் மூல­மாக போதைப்­பொ­ருள் கடத்தி வரப்­ப­டு­வதாக வெளி­யான தக­வல் மக்­கள் மத்­தி­யில் இப்போது பர­ப­ரப்­பா­கப் பேசப்­ப­டு­கிறது.