கோவையில் பதற்றம்: 400க்கும் மேற்பட்ட சிறப்புப்படையினர் குவிப்பு

கோவை: மூன்று இடங்­களில் பெட்­ரோல் குண்­டு­களை வீசி தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டதை அடுத்து, கோவை மாந­க­ரில் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அங்கு நானூ­றுக்­கும் மேற்­பட்ட சிறப்­புக் காவல் படை­யினர் குவிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

நக­ரின் பல்­வேறு பகு­தி­களில் காவல்­து­றை­யி­னர் வாக­னச் சோதனை­யில் ஈடு­பட்­டுள்­ள­னர் என்­றும் சந்­தே­கத்­துக்கு இட­ம­ளிக்­கும் வகை­யில் நட­மா­டு­வோ­ரி­டம் தீவிர விசா­ரணை மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­க­வும் ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

கோவை சித்­தா­புத்­தூர் பகு­தி­யில் மாவட்ட பாஜக அலு­வ­ல­கம் இயங்கி வரு­கிறது. அண்­மை­யில் அடை­யா­ளம் தெரி­யாத சிலர் இந்த அலு­வ­ல­கத்­தின் மீது பெட்­ரோல் குண்­டு­களை வீசி­விட்டு தப்­பி­யோடி­னர். இந்­தச் சம்­ப­வத்தை அடுத்து கோவை­யின் பர­ப­ரப்­பான பகு­தி­யில் உள்ள துணிக்­கடை மீதும் பெட்­ரோல் குண்டு வீசப்­பட்­டது.

இதை­ய­டுத்து, பாது­காப்பு ஏற்­பா­டு­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­ட­து­டன், சுற்­றுக்­கா­வல் பணி­யில் அதிக எண்­ணிக்­கை­யி­லான காவ­லர்­கள் ஈடு­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

எனி­னும், மூன்­றா­வது சம்­ப­வ­மாக கோவை நூறடி சாலை­யில் உள்ள பாஜக ரத்­தி­ன­புரி மண்­ட­லத் தலை­வர் மோகன் என்­ப­வ­ருக்குச் சொந்­த­மான கடை­யில் பெட்­ரோல் குண்­டு­வீ­சப்­பட்­டது. மேலும், குனி­ய­முத்­தூர் பகு­தி­யில் உள்ள இந்து முன்­னணி மாவட்ட பொறுப்­பாளர் தியா­கு­வின் கார் மீது சிலர் பெட்­ரோலை ஊற்றி தீ வைத்­துச் சென்­ற­னர். இத­னால் கோவை­யில் பதற்­றச் சூழ்­நிலை காணப்­ப­டு­கிறது.

பெட்­ரோல் குண்டு வீச்சு சம்பவங்­க­ளு­டன் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளி­களைப் பிடிக்க ஐந்து தனிப்­ப­டை­கள் அமைக்­கப்­பட்­டுள்­ள­தாக காவல்­துறை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கோவை மாந­க­ரில் உள்ள ஆத்­துப்­பா­லம், டவுன்­ஹால், காந்­தி­பு­ரம் உள்­ளிட்ட முக்­கிய இடங்­களில் தீவிர வாகனச் சோதனை நடைபெற்று வரு­கிறது. மக்­கள் அதி­கம் கூடும் இடங்­க­ளி­லும் பாஜக கட்சி அலு­வ­ல­கம், இந்து முன்­னணி அலு­வ­ல­கம், பள்­ளி­வா­சல்­கள் ஆகிய இடங்­களில் காவல்­து­றை­யி­னர் குவிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

சந்­தே­கத்­தின் பேரில் மூன்று பேர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர்­க­ளி­டம் தீவிர விசாரணை நடை­பெற்று வரு­வ­தா­க­வும் காவல்­துறை வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!