தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடப்பாரையால் கதவை உடைத்த மருமகள்

1 mins read
c9fd681d-9fef-41f3-95b6-127d000730aa
கதவை உடைக்கும் பிரவீனா. படம்: ஊடகம் -

திருவாரூர்: திரு­வா­ரூ­ரைச் சேர்ந்த 30 வய­தான பிர­வீ­னா­வுக்­கும் மயி­லா­டு­து­றை­யைச் சேர்ந்த நட­ரா­ஜ­னுக்­கும் கடந்த ஆண்டு திரு­ம­ணம் நடை­பெற்­றது.

திரு­ம­ணத்­தின்­போது 24 பவுன் நகை, இரு­சக்­கர வாக­னம், மூன்று லட்ச ரூபாய் மதிப்­புள்ள மற்ற சீர்­வ­ரிசை பொருள்­களை பிர­வீ­னா­வின் பெற்­றோர் அளித்­த­னர்.

ஆனால் திரு­ம­ணம் முடிந்த பிறகு, மேலும் வர­தட்­சணை கேட்டு பிர­வீ­னா­வுக்கு நெருக்­கடி கொடுத்த கண­வர் குடும்­பத்­தார், அண்­மை­யில் அவரை வீட்டை விட்டு வெளி­யேற்­றி­னர்.

மேலும், அவர் வீட்­டிற்­குள் நுழை­யா­மல் இருக்க வீட்­டைப் பூட்­டி­விட்டு, அரு­கில் உள்ள உற­வி­னர் வீட்­டுக்­குச் சென்­று­விட்­ட­னர்.

இரு­பது நாள்­கள் பூட்­டப்­பட்ட வீட்­டைப் பார்த்­து­விட்டு திரும்­பிச்­சென்ற பிர­வீனா, ஒரு கட்­டத்­தில் பொறு­மை­யி­ழந்து, பொது­மக்­கள் உத­வி­யு­டன் கடப்­பா­ரை­யால் வீட்­டின் பூட்டை உடைத்து கண­வ­ரின் வீட்­டிற்­குள் அதி­ர­டி­யா­கப் புகுந்­தார். பின்­னர் கண­வ­ரு­டன் தம்மை வாழ வைக்க வழி செய்­யு­மாறு காவல்­து­றை­யில் மனு­வும் அளித்­துள்­ளார்.