வெளிநாடு, வெளிமாநிலங்களில் தமிழ் கற்பிக்க பரப்புரைக் கழகம்

வெளிநாடு, வெளிமாநிலங்களில் தமிழ் கற்பிக்க பரப்புரைக் கழகம்

2 mins read
406b3e3c-cde5-4541-9edb-d1e3d8bc71b6
மு.க.ஸ்டாலின். படம்: ஊடகம் -

சென்னை: வெளி­நாடு, வெளி­மாநி­லங்­களில் வசிப்­ப­வர்­க­ளுக்கு தமிழ் மொழி­யைக் கற்­பிக்க தமிழ் பரப்­பு­ரைக் கழ­கத்­தைத் தொடங்கி உள்­ளது தமி­ழக அரசு.

தொடக்க விழா­வில் பேசிய முதல்­வர் மு.க.ஸ்டா­லின், 'வீழ்­வது நாமாக இருந்­தா­லும், வாழ்­வது தமி­ழாக இருக்­கட்­டும்' என்­பதை முழக்­க­மாக கொண்ட திமுக அர­சுக்கு தமிழ் பரப்­புரைக் கழ­கம் தொடங்­கு­வது என்­பது முழு­மு­தல் கடமை என்று குறிப்­பிட்­டார்.

"பல நூறு ஆண்­டு­க­ளாக தமி­ழின் சொத்­து­கள் சேக­ரித்து வைக்­கப்­ப­டா­மல் அழிந்து போய்­விட்­டன. அந்­தத் தவறு தடுக்­கப்­பட்டு இன்று தொகுத்­தும் சேக­ரித்­தும் தொழில்­நுட்ப அடிப்­ப­டை­யில் மாற்­றி­யும் வைத்­தி­ருக்­கி­றோம்.

"தமி­ழர்­கள் முப்­ப­துக்­கும் மேற்­பட்ட நாடு­களில் அதி­க­மா­க­வும் அறு­ப­துக்­கும் மேற்­பட்ட நாடு­களில் குறைந்த எண்­ணிக்­கை­யி­லும் வாழ்­கி­றார்­கள். சில நாடு­களில் தமிழ் எழு­த­வும் பேச­வும் படிக்­க­வும் மறந்த தமி­ழர்­கள் இருக்­கி­றார்­கள். இவர்­கள் அனை­வ­ருக்­கும் தமிழ் சொல்லிக் கொடுப்­ப­தற்­குத்­தான் தமிழ் பரப்­பு­ரைக் கழ­கம் தொடங்­கப்­பட்டு உள்­ளது," என்­றார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.

தமி­ழர்­கள் உணர்­வால், உள்­ளத்­தால், தமி­ழால் இணைந்­துள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், மொழிக்கு மட்­டுமே அன்­பால் இணைக்­கக்­கூ­டிய ஆற்­றல் உண்டு என்­றார்.

மேலும், மொழி­யால் இணைந்­த­வர்­களை சாதி­யால், மதத்­தால் பிரிக்க முடி­யாது என்­றும் தமி­ழால் ஒன்­றி­ணைய வேண்­டிய காலக்­கட்­டத்­தில் தமிழ் பரப்­பு­ரைக் கழ­கம் தொடங்­கப்­பட்டு உள்­ளது என்­றும் தெரி­வித்­தார்.

தமிழ் மொழியை உல­கெங்­கும் கொண்டு செல்­கின்ற உய­ரிய நோக்­கத்­து­டன் பரப்­பு­ரைக் கழ­கம் தொடங்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் இது தமி­ழின் புகழ் பாடும் கழ­கம் அல்ல என்­றும் பேசிக் கழிக்­கும் கழ­கம் அல்ல என்­றும் தெளி­வு­படுத்­தி­னார்.

"தமிழ் பரப்­பு­ரைக் கழ­கத்­தின் மூல­மாக 22 நாடு­கள், 20 மாநி­லங்­க­ளைச் சார்ந்த 25 ஆயி­ரம் மாண­வர்­கள் முதல் கட்­ட­மாக பய­ன­டைய இருக்­கி­றார்­கள். இதனை மேலும் உல­கம் முழு­வ­தும் வாழக்­கூ­டிய பல ஆயி­ரக்­க­ணக்­கான அய­ல­கத் தமிழ் மாண­வர்­க­ளுக்கு கொண்டு செல்­லக்­கூ­டிய பணியை தமிழ் இணைய கல்­விக்­க­ழ­கம் மூல­மாக தமி­ழக அரசு மேற்­கொள்­ளும்," என்­றார் முதல்­வர் ஸ்டா­லின்.

தமிழ் இணை­யக் கல்­விக் கழ­கத்­தின் மேம்­பாட்­டுப் பணி­க­ளுக்­காக ரூ.5 கோடி நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. அதே­போல், தமிழ் வளர்ச்­சித்­து­றைக்­கும் ரூ.82 கோடி ஒதுக்கி பல்­வேறு செயல்­திட்­டங்­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இந்த விழா­வின்­போது அய­லக மாண­வர்­கள் தமிழ் கற்­ப­தற்­காக 24 மொழி­களில் மொழி பெயர்க்­கப்­பட்ட பாடப்­புத்­த­கங்­க­ளை­யும் தமிழ் கற்­றல், கற்­பித்­த­லுக்­கான மேலாண்­மைச் செயலி, துணைக் கரு­வி­க­ளை­யும் அவர் வெளி­யிட்­டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்