ரூ.15 ஆயிரம் கோடிக்கு முறைகேடு: அமைச்சர் குற்றச்சாட்டு

ரூ.15 ஆயிரம் கோடிக்கு முறைகேடு: அமைச்சர் குற்றச்சாட்டு

2 mins read
2d2fad69-f785-4e5a-bcbe-af77a195f8ec
-

மதுரை: பயிர்க்­க­டன், நகைக்­க­டன் தள்­ளு­படி தொடர்­பாக, அதி­முக ஆட்­சி­யில் ரூ.15 ஆயி­ரம் கோடிக்கு தவறு நடந்­துள்­ள­தாக தமி­ழக நிதி, மனி­த­வள மேலாண்­மைத்­துறை அமைச்­சர் பழ­னி­வேல் தியா­க­ராஜன் தெரி­வித்­துள்­ளார்.

மது­ரை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், கடந்த ஆட்­சி­யில் நடந்த தவ­று­க­ளைத் திருத்­து­வது திமுக அர­சின் கடமை என்­றார்.

மேலும், இவ்­வாறு தவ­று­க­ளைத் திருத்­தா­விட்­டால் திமு­க­வின் அடிப்­ப­டைக் கொள்­கைக்கே துரோ­கம் செய்­வ­து­போல் ஆகி­வி­டும் என்­றும் அவர் கூறி­னார்.

"திமுக அர­சைப் பொருத்­த­வரை, சுய­ம­ரி­யாதை, சமூக நீதி, எல்­லா­ருக்­கும் எல்­லாம், சம­மான வாய்ப்பு, கல்வி மூலம் முன்­னேற்­றம், பொரு­ளா­தார நீதி என்ற அடிப்­படை­யில் அர­சுக் கோப்­பு­களைச் சரி­பார்க்­கி­றோம்.

"இது­வரை ஐந்­தா­யி­ரம் கோப்­பு­கள் என்­னி­டம் வந்­தி­ருக்­கும். அவற்­றில் சில கோப்­பு­களை விளக்­கம், திருத்­தம் கேட்­டும் வேறு கார­ணங்­க­ளுக்­கா­க­வும் திருப்பி அனுப்­பி­யி­ருக்­கி­றேன்.

"எதற்­காக நிதி­ய­மைச்­சர் கோப்­பைத் திருப்பி அனுப்­பு­கி­றார் என்று முதல்­வ­ருக்­குத் தெரி­யும். ஒவ்­வொரு திட்­ட­மும் நமது கொள்­கையை வளர்க்­கிறது, கொள்­கைக்கு ஏற்­பு­டை­யது என்­றால் உட­ன­டி­யாக கையெ­ழுத்­தி­டு­வேன். தெளி­வில்லை, கணக்கு சரி­யில்லை என்­றால் திருப்பி அனுப்பி­வி­டு­கி­றேன்," என்­றார் அமைச்­சர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன்.

கடந்த பத்து ஆண்­டு­கால அதி­முக ஆட்­சி­யில் வித­வை­கள், மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கு­ரிய உத­வித்­தொகை உயர்த்­தப்­ப­ட­வில்லை என்று சுட்­டிக்­காட்­டிய அவர், இது சமூக நீதிக்கு எதி­ரான செயல் என்­றார்.

"சில தர­வு­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு, தவறு நடக்­கா­மல் உண்­மைப்­ப­ய­னா­ளி­க­ளுக்கு அர­சுத் திட்­டங்­க­ளைக் கொண்­டு­போய்ச் சேர்ப்­பதை இலக்­காக வைத்­தி­ருக்­கி­றோம். திமுக ஆட்­சிக்கு வந்­த­போது அதி­முக கொண்­டு­வந்த விவ­சாய பயிர்க்­க­டன் தள்­ளு­படி, நகைக்­க­டன் தள்­ளு­படி திட்­டத்தை செயல்­ப­டுத்த வேண்­டி­யி­ருந்­தது.

"இந்த இரண்டு திட்­டங்­க­ளி­லும் அதி­முக ஆட்­சி­யில் ரூ.15 ஆயி­ரம் கோடிக்கு மேல் தவறு நடந்­துள்­ளது. ஏழை, சாமா­னிய மக்­க­ளுக்­குப் போய்ச் சேர வேண்­டிய நிதி­யை கொள்­ளை­ய­டித்­தி­ருக்­கி­றார்­கள்," என்­றார் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன்.