புதிய ஐபோன் 14 இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் இந்த ரக கைத்தொலைபேசிகள் தயாரிக்கப்படும் எனக் கூறப்பட்டது.
ஐபோன் 14 தயாரிப்பில் சுமார் ஐந்து விழுக்காட்டை இந்தியாவுக்கு மாற்றிவிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் இந்த ரக கைத்தொலைபேசிகளில் 25 விழுக்காட்டை இந்தியாவில் உற்பத்தி செய்ய நிறுவனம் எண்ணுகிறது.
சீனாவில் உற்பத்தி செய்யப்படும் ஆப்பிள் பொருள்களில் 25 விழுக்காட்டை 2025க்குள் மற்ற நாடுகளுக்கு மாற்றிவிடுவது ஆப்பிள் நிறுவனத்தின் இலக்கு.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவும் வர்த்தக போர் காரணமாக ஆப்பிள் நிறுவனம் சீனாவில் உள்ள தனது உற்பத்தி தொழிற்சாலைகளை மற்ற நாடுகளுக்கு மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளது.