மின்சாரக் கம்பி அறுந்து விழுந்தால் அலாரம் ஒலிக்கும்

மின்சாரக் கம்பி அறுந்து விழுந்தால் அலாரம் ஒலிக்கும்

1 mins read
e2abd506-b751-4ed6-9dcc-ea2a4024bdfe
-

சென்னை: மழைக்­கா­லங்­களில் மின்­கம்­பங்­கள் சாய்ந்து கம்­பி­கள் அறுந்து விழு­வ­தும் அவற்­றைத் தவ­று­த­லாக யாரே­னும் மிதிக்­கும் போது மின்­சா­ரம் தாக்கி உயி ரிழக்­கும் சம்­ப­வங்­களும் அதி­க­ரித்து வரு­கின்றன.

இது­போன்ற விபத்­து­க­ளை­யும் உயி­ரி­ழப்­பு­க­ளை­யும் தடுக்க 376,000 'டிரான்ஸ்­பார்­மர்'களில் நவீன சாத­னங்­க­ளைப் பொறுத்த மின்­வா­ரி­யம் முடிவு செய்­துள்­ளது. இதற்­கான திட்ட செலவு 5,800 கோடி ரூபாய் என்று வரையறுக்­கப்­பட்­டுள்­ளது.

மின்­கம்பி அறுந்து விழும் போது, நவீன சாத­னங்­கள் தானா­கவே செயல்­பட்டு, 'டிரான்ஸ்­பார்­மரில்' இருந்து மின்­சா­ரம் வரு­வதை உடனே துண்­டிக்­கும். இத­னால் மின்­சா­ரம் பாய்ந்து, உயி­ரி­ழப்பது ஏற்­ப­டாது. உடனே கட்­டுப்­பாட்டு அறை­யில் அபாய எச்­ச­ரிக்கை மணி ஒலிக்­கும்.

அத்­து­டன், பாதிக்­கப்பட்ட வர்கள் உள்ள இடத்­தை­யும் காட்­டும் என்பதால், ஊழி­யர்­கள் விரைந்து வந்து சேத­ம­டைந்த மின்­கம்­பியைச் சீர­மைக்க முடியும்.

இத்­திட்­டத்தைச் செயல்­ப­டுத்த தமி­ழக அர­சி­டம் மின்­வா­ரி­யம் ஒப்­பு­தல் கேட்­டுள்­ளது.