மூட்டை மூட்டையாக சிக்கிய மலேசிய நாணயங்கள்: அதிகாரிகள் விசாரணை

சென்னை: சென்னையில் வாகனச் சோதனையின்போது சிறுசிறு மூட்டைகளாக 25 மூட்டைகளில் கட்டப்பட்டிருந்த மலேசிய நாணயங்கள் சிக்கின.

இவற்றைப் பறிமுதல் செய்த காவலர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எழும்பூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு காவலர்கள் சுற்றுக்காவல் பணியில் ஈடு பட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, பி.வி செழியன் சாலையோரத்தில் சந்தேகப்படும் விதத்தில் டாட்டா ஏஸ் வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அதில் சிறிய சிறிய மூட்டைகளாக 25 மூட்டைகளில் நாணயங்கள் இருந்தன. அவையெல்லாம் மலே சிய காசுகள் என தெரியவந்தது.

இதனையடுத்து டாட்டா ஏஸ் வாகனத்தைப் பறிமுதல் செய்த எழும்பூர் காவலர்கள், மலேசிய நாணயங்களைக் கொண்டு வந்தி ருந்த செழியன் சாலையைச் சேர்ந்த ஆசிப், வாகன ஓட்டுநர் பாபு ஆகியோரை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நாணயங்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன? யாரிடம் அவற்றைக் கொடுக்க இருந்தனர்? அவற்றின் மதிப்பு குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!