சென்னையில் விரைவில் 'ஐ-போன் 14' தயாரிக்க உள்ள ஆப்பிள் நிறுவனம்

சென்னையில் விரைவில் 'ஐ-போன் 14' தயாரிக்க உள்ள ஆப்பிள் நிறுவனம்

1 mins read
536c3236-b56b-4e29-b14b-effc30025d99
-

திருப்பெரும்புதூர்: சென்னை அருகே திருப்பெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் ஐபோன்-14 கைப்பேசிகளை விரைவில் ஆப்பிள் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபாக்ஸ்கான் ஆலையில் உற்பத்தியாகும் ஐபோன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் இவை உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்டாலும் கைப்பேசியின் விலை யில் உடனடியாக மாற்றம் இருக் காது என்றும் அதற்கு சில காலாண்டுகள் வரை தேவைப்படும் என்றும் ஆப்பிள் நிறுவன வட்டா ரங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஆப்பிள் நிறுவனம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் "இந்தியா வில் ஐபோன்-14 உற்பத்தியை தொடங்க இருக்கிறோம். புதிய, நவீன மாடலில் தயாராகும் ஐபோன், புதிய தொழில்நுட்பங் களையும் அதிகமான பாதுகாப்பு அம்சங்களையும் உள்ளடக்கி இருக்கும்," எனக் கூறியுள்ளது.

ஐபோன்-13 கைப்பேசியை ஒன்றுசேர்க்கும் பணி ஏப்ரல் 13ஆம் தேதி தொடங்கியது. அடுத்த ஐந்து மாதங்களில் ஐபோன்-14 கைப்பேசியை ஒன்று சேர்க்கும் பணிகள் அனைத்தும் சென்னை ஆலையில் முடிக்கப் பட்டு, உள்நாட்டுக்கும் வெளி நாட்டுக்கும் வழங்கப்பட உள்ளன.