திண்டுக்கல் சீனிவாசனுக்கு எதிராகப் புகார்

திண்டுக்கல் சீனிவாசனுக்கு எதிராகப் புகார்

1 mins read
5faac32e-f131-4d3f-91fb-17819a5912f3
-
Google News Preferred Icon

திண்டுக்கல்: கடந்த அதிமுக ஆட்சியின்போது திண்டுக்கல் மலைக்கோட்டை மீது பலதரப்பட்ட மரங்களை நட்டு பசுமையாக்குவதாகக் கூறி அத்தி, அரசு, இச்சி, கல் உள்ளிட்ட மரங்களை அப்போதைய வனத்துறை அமைச்சர் சீனிவாசன் நட்டார். ஆனால், அதனை வளர்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அரசுக்கு ரூ.50 லட்சம் பணம் விரயமானதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு முறையான விசாரணை நடத்தக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றையும் அக்கட்சியினர் அளித்துள்ளனர்.