'திருடப்பட்ட 113 ஆவணங்களும் மீட்பு'

'திருடப்பட்ட 113 ஆவணங்களும் மீட்பு'

2 mins read
54291a00-a238-4dd2-937c-5c6944b797bb
-

சென்னை: அண்­மை­யில் நடந்த கல­வ­ரத்­தின்­போது ஓபி­எஸ் தரப்­பி­ன­ரால் அதி­முக தலைமை அலு­வ­ல­கம் சூறை­யா­டப்­பட்­ட­தாக புகார்­அளிக்­கப்­பட்ட நிலை­யில், திருட்­டுப் போன அனைத்து ஆவணங்­களும் மீட்கப்பட்டு­விட்­ட­தாக சிபி­சி­ஐடி காவ­லர்­கள் தெரிவித்­துள்­ள­னர்.

"திருட்டுப் போன 113 ஆவ­ணங் களை­யும் மீட்டு நீதி­மன்­றத்­தில் ஒப்­ப­டைத்­துள்­ளோம். முன்னாள் முதல்வர் ஓ.பன்­னீர்செல்­வத்தின் ஆத­ர­வா­ளரான கொளத்­தூர் கிருஷ்­ண­மூர்த்­தி­யி­டம் இருந்து அனைத்து ஆவ­ணங்­களும் மீட்­கப்­பட்­டுள்­ளன," என்று சிபி­சி­ஐடி காவ­லர்­கள் கூறி­யுள்­ள­னர்.

அதி­மு­க­வில் நெடு­நாள்­க­ளா­கவே இபி­எஸ், ஓபி­எஸ் தரப்­பி­ன­ரி­டம் ஒற்­றைத் தலைமை குறித்து மோதல் போக்கு நீடித்து வந்­தது.

ஒற்றைத் தலைமையே தேவை என இபிஎஸ் தரப்பினரும் இரட் டைத் தலைமையே கட்சி வளர்ச்சிக்கு உகந்தது என ஓபிஎஸ் தரப்பினரும் பிடிவாதம் பிடித்தனர்.

இந்நிலையில், அதிமுகவில் இடைக்­கா­லப் பொதுச்­செ­ய­லா­ள­ராக இபிஎஸ்சை தேர்வு செய்­வ­தற்­காக கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி அக்­கட்­சி­யின் பொதுக்­குழு கூட்­டம் சென்­னையை அடுத்த வான­க­ரத்­தில் நடைபெற்­றது.

அப்­போது, சென்னை ராயப்­பேட் டையில் உள்ள அதிமுக அலு­வ­ல­கத்­துக்கு ஓ.பன்­னீர்­செல்­வ­மும் அவ­ ரது ஆத­ர­வா­ளர்­களும் வந்­த­னர்.

அலு­வ­ல­கப் பூட்டை உடைத்து அதி­ர­டி­யாக உள்ளே புகுந்­ததை அடுத்து, ஓபிஎஸ், இபிஎஸ் ஆத­ர­வா­ளர்­கள் இடையே கல­வ­ரம் வெடித்­தது. இதில் 50க்கும் மேற்­பட்­டோர் காயமடைந்­த­னர்.

கல­வ­ரத்தை தணிக்கும் வகை யில் வரு­வாய்த்­துறை அதி­கா­ரி­கள் அதிமுக அலு­வ­ல­கத்­தை பூட்டி முத்திரை வைத்­த­னர்.

இந்நிலையில், வெள்ளிவேல் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள், முக்கிய ஆவணங்களைத் திருடிச் சென்றுவிட்டதாக ஓபிஎஸ் தரப்பினர் மீது இபிஎஸ் தரப்பினர் புகார் அளித்தனர்.

இதையடுத்து, ஓபிஎஸ் உள்பட 60 பேர் மீது வழக்குப் பதிவானது. இதுதொடர்பாக சிபிசிஐடி காவ லர்கள் ஆய்வு செய்ததில் வெள்ளி வேல் அதிமுக அலுவலகத்தில் இருப்பது தெரியவந்தது.

இதனிடையே நேற்று இரண் டாவது முறையாக பழனிசாமி தலைமை அலுவலகம் சென்று, அங்கு நடைபெறும் சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டடார்.