சென்னையில் கட்டடத்திலிருந்து ஒருவரைத் தள்ளிவிட்டுக் கொன்ற மூவர்

சென்னையில் கட்டடத்திலிருந்து ஒருவரைத் தள்ளிவிட்டுக் கொன்ற மூவர்

1 mins read
923a844f-d606-40c1-9124-544e381ad1a3
கைதுசெய்ப்பட்ட வி சக்திவேல், பி. பிரசாந்த், சி. ஸ்ரீநிவாசன். படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா -
Google News Preferred Icon

சென்னை: ஒரு கட்டடத்தின் மூன்றாம் தளத்திலிருந்து சக ஊழியரைத் தள்ளிவிட்டுக் கொன்ற மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சென்னையின் வேளச்சேரி வட்டாரத்தில் இருக்கும் கட்டப்பட்டுவரும் கட்டடத்தில் சனிக்கிழமையன்று (24 செப்டம்பர்) இச்சம்பவம் நிகழ்ந்தது.

மாண்ட எஸ். ஆனந்தன் எனும் ஊழியரைப் பணிக்கு எடுத்த நிறுவனம் அவருக்குக் கூடுதலாக 200 ரூபாய் தொகை அளித்ததாகக் கருதப்படுகிறது.

அதனால் 25 வயது வி. சக்திவேல், 25 வயது பி. பிரசாந்த், 26 வயது சி. ஸ்ரீநிவாசன் ஆகியோர் அவரைக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

வேளச்சேரியில் தண்டீஸ்வரம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கட்டடத்தின் கட்டுமானப் பணிக்குழுவில் இவர்களும் ஆனந்தனும் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

23 வயது ஆனந்தன் ஞாயிற்றுக்கிழமையன்று (25 செப்டம்பர்) உயிரிழந்தார்.