ஏழு பெண்களுக்கு ஆயுள் சிறை; 13 பேருக்கு 20 ஆண்டு சிறை

ஏழு பெண்களுக்கு ஆயுள் சிறை; 13 பேருக்கு 20 ஆண்டு சிறை

2 mins read
24251bba-30e6-4774-9584-f60701d2a343
ஆயுள் தண்டனை, சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: சென்னை, வண்­ணா­ரப்­பேட்­டை­யைச் சேர்ந்த 13 வயது சிறு­மியைப் பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளாக்கி, பாலி­யல் தொழி­லில் தள்­ளி­ய­தாக 21 பேரை குற்­ற­வா­ளி­கள் என போக்சோ சிறப்பு நீதி­மன்­றம் கடந்த 15ஆம் தேதி தீர்ப்­ப­ளித்­தது.

இந்தக் குற்றவாளிகளுக்­கான தண்­டனை விவ­ரத்தை நீதி­மன்­றம் நேற்று முன்தினம் அறி­வித்­தது.

மொத்தமுள்ள 21 பேரில் சிறு­மி­யைப் பாலி­யல் தொழி­லில் தள்­ளிய ஏழு பெண்­கள் உட்­பட எட்டு பேருக்கு ஆயுள் தண்­டனை விதிக்­கப்பட்டது.

அத்­து­டன், பாஜக பிர­மு­கர் ராஜேந்­தி­ரன், 44, காவல் ஆய்­வாளா் புக­ழேந்தி, 55, தனியாா் தொலைக்­காட்சி செய்­தி­யாளா் வினோ­பாஜி, 39, உட்­பட 13 பேருக்கு 20 ஆண்டு­கால சிறைத்தண்­ட­னை­யும் விதிக் கப்பட்டது.

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் 'போக்சோ' சிறப்பு நீதி­மன்ற நீதி­பதி ராஜ­ெலட்­சுமி இந்த அதி­ரடி உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

மேலும், பாதிக்­கப்­பட்ட சிறு­மிக்கு அரசு சாா்பில் ரூ.5 லட்­சம் இழப்­பீடு வழங்­கவும் உத்தரவிட்ட நீதிபதி, குற்­ற­வா­ளி­கள் 21 பேருக்கும் விதிக்­கப்­பட்ட ஒட்­டு­மொத்த அப­ரா­தத் தொகையான ரூ.2 லட்­சமும் பாதிக்­கப்­பட்ட சிறு­மியிடம் வழங்­கப்­பட வேண்­டும் என்­றும் தீர்ப்பில் குறிப்பிட்டார்.

சென்னை வண்ணாரப்பேட்டை யைச் சேர்ந்த பூங்குழலி (உண்மைப் பெயரல்ல) என்ற 13 வயது சிறுமி கடந்த 2020 நவம்பர் மாதத்தில் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், "எனது உறவினர்கள் என்னைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றனர். காவல் ஆய்வாளர், அரசியல் கட்சி யைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் என்னை அடிக்கடி பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொடுமைப்படுத்து கிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்குத் தொடர்பில், சிறு­மியைப் பாலியல் தொழிலில் ஈடு­படுத்­தி­ய­தாக சிறுமி­யின் உற­வி­னர் ஷகிதா பானு, அவருக்கு உடந்­தை­யாக இருந்த காவல் ஆய்­வா­ளர் புக­ழேந்தி, செய்­தி­யா­ளர் வினோ­பாஜி, பாஜக பிர­மு­கர் ராஜேந்தி­ரன், நாக­ராஜ், மாரீஸ்­வரன், பொன்­ராஜ் உள்­ளிட்ட 26 பேர் மீது வழக்குப் பதியப்பட்டு, 21 பேர் கடந்த ஆண்டு நவம்­பர் மாதம் கைதாகினர்.

நால்வர் காணா­மல் போயுள்­ள­னர். ஒரு­வர் உயி­ரிழந்­து­விட்­டார்.

கைதான தர­கர் ராஜேந்­தி­ர­ னிடம் நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­யில், ஏழைச் சிறு­மி­களைப் பாலி­யல் தொழிலில் ஈடு­ப­டுத்­தி­ய­தையும் பல துறை­களைச் சேர்ந்த உயர் அதி­கா­ரி­களுக்கு சிறு­மி­களை அனுப்பி வைத்ததையும் ஒப்­புக்­கொண்­டார்.