'மிஸ் தமிழ்நாடு' பட்டம் வென்ற கட்டடத் தொழிலாளியின் மகள்

'மிஸ் தமிழ்நாடு' பட்டம் வென்ற கட்டடத் தொழிலாளியின் மகள்

2 mins read
49879fe8-2307-4c9e-a74f-46a29dff78e7
ரக்சயா தனது வெற்றிக்கிண்ணம், சான்றிதழுடன். படம்: ஊடகம் -

செங்கல்பட்டு: கட்டுமான ஊழியர் ஒருவரின் மகள், 'மிஸ் தமிழ்நாடு' பட்டத்தை வென்று தமிழக மக் களை வியக்க வைத்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக் கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகர். இவரது மகள் ரக்‌சயா, தனது சிறு வயது முதலே அழகிப் போட்டியில் பங்கேற்று வெற்றிபெற வேண்டும் என்ற லட்சிய வேட்கை யுடன் இருந்துவந்துள்ளார்.

இந்நிலையில், கல்லூரிப் படிப்பை முடித்துள்ள ரக்‌சயா, குடும்பத்தின் ஏழ்மை சூழலையும் பொருட்படுத்தாமல் பகுதிநேரமாக பணிபுரிந்துகொண்டு, போட்டியில் பங்கேற்க தன்னைத்தானே தயார்ப்படுத்திக்கொண்டார்.

மாவட்ட அளவிலான அழகிப் போட்டியில் தேர்வான இவர், ராஜஸ்தான் மாநிலம், ெஜய்ப்பூரில் கடந்த வாரம் மூன்று நாள்களாக நடந்த 'ஃபார்எவர் மிஸ் இந்தியா' அழகிப் போட்டியில் பங்கேற்றார்.

இப்போட்டியில், நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில், தமிழகம் சார்பில் கலந்துகொண்ட ரக்சயா 'மிஸ் தமிழ்நாடு' பட்டத்தை வென்று ச‌ாதனை படைத்துள்ளார்.

கன்னியாகுமரியைச் சேர்ந்த மற்றொரு இளம்பெண் அடுத்த நிலையில் தேர்வாகி உள்ளார்.

அதேபோல், அனைத்து மாநிலங்களில் இருந்தும் 'வின்னர், ரன்னர்' என 750 பேர் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.

வரும் டிசம்பர் மாதம் நடக்க உள்ள 'மிஸ் இந்தியா' அழகிப் போட்டி மேடையில் இவர்கள் இப் பட்டத்தை வெல்ல அழகுநடை போட உள்ளனர்.

"நிச்சயம் நான் மிஸ் இந்தியா பட்டத்தை தட்டிச்செல்வேன்," என்று நம்பிக்கையாகக் கூறும் ரக்சயா, மாநில அரசு தங்களுக்கு உறு துணையாக இருக்கவேண்டும் என் றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.