காலணித் தொழிற்சாலையில் தீ விபத்து; ரூ.5 கோடி மதிப்பிலான பொருள்கள் தீக்கிரை

காலணித் தொழிற்சாலையில் தீ விபத்து; ரூ.5 கோடி மதிப்பிலான பொருள்கள் தீக்கிரை

1 mins read
2466d6cc-8eae-491b-a829-7e912253afef
காலணி தயாரிக்கும் தொழிற் சாலையில் நேற்று முன்தினம் இரவு மூண்ட தீ, நேற்று காலையில் தான் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. படம்: தமிழக ஊடகம் -

ஆம்­பூர்: ஆம்­பூர் அருகே காலணி தயா­ரிக்­கும் தொழிற்­சா­லை­யில் திடீ­ரென மூண்ட தீ வி­பத்­தில், ரூ.5 கோடி மதிப்­பி­லான கால­ணி­களும் தோலால் ஆன உதி­ரிப் பாகங்­களும் எரிந்து தீக்­கி­ரை­யா­கின.

விசா­ர­ணை­யில், மின்­க­சிவு கார ணமாக இத்­தீ­வி­பத்து ஏற்­பட்டி ருக்­க­லாம் என்று கூறப்­ப­டு­கிறது.

தொழிற்­சா­லை­யில் வைக்­கப்­பட்­டி­ருந்த ரசா­ய­னப் பொருள்­களும் தீயில் எரிந்து நாச­மா­ன­தால், அப்­பகுதி முழு­வ­தும் கரும் புகை மூட்­டம் சூழ்ந்­தி­ருந்­தது. இத­னால், கிராம மக்­கள் மூச்­சுத் திண­ற­லுக்கு ஆளாகி அவ­திப்­பட்­ட­னர்.

திருப்­பத்­தூர் மாவட்­டம், ஆம்­பூரை அடுத்த சின்ன வரிக்­கம் பகு­தி­யில் உள்ள காலணித் தொழிற்­சா­லை­யில் 3,000க்கும் மேற்­பட்ட ஆண், பெண் ஊழியர்­கள் பணி­புரிந்து வந்த நிலை­யில், நேற்று முன்­தி­னம் இரவு இத்­தொழிற்­சா­லை கிடங்­கில் தீப்­பற்­றி­யது.

இத­னைக் கண்ட தொழி­லா­ளர்­கள் அல­றி­ய­டித்­துக் கொண்டு வெளியே ஓடி­வந்­த­னர்.

கிடங்கு முழு­வ­தும் விரைந்து பர­விய தீயை அணைக்­கும் பணி­யில் ஆம்­பூர், வாணி­யம்­பாடி, பேர­ணாம்­பட்டு, குடி­யாத்­தம், ஆலங் காயம், நாட்­றம்­பள்ளி உள்­ளிட்ட பகு­தி­க­ளைச் சேர்ந்த 17 தீய­ணைப்பு வாக­னங்­களும் 50க்கும் மேலான வீரர்­களும் ஈடு­பட்­ட­னர்.

12 மணி நேர­மா­கப் போராடி நேற்று காலை­யில்­தான் தீ அணைக்­கப்­பட்­டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 23 முதல் 28ஆம் தேதி­வரை இந்த தொழிற்­சா­லைக்­குச் சொந்­த­மான 15க்கும் மேற்­பட்ட காலணி, தோல் தொழிற்­சா­லை­களில் வரு­மான வரித்­து­றை­யி­னர் சோதனை நடத்­தி­னர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.