'அமைதிக்கு பங்கம் விளையும்'

'அமைதிக்கு பங்கம் விளையும்'

1 mins read
0c22e0ec-33ca-4cc3-bf0a-5daf26b39add
-
Google News Preferred Icon

சென்னை: சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலையை சந்தேகப் பேர்வழிகள் சிலர் சேதப் படுத்தியதற்கு இபிஎஸ், தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பொது அமைதியை சீர்குலைக்க நினைக்கும் விஷமிகளை உடனடியாக கைது செய்யவேண்டும் என அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

அதேபோல் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், "மறைந்த தலை வர்களின் சிலைகளை இழிவு படுத்துவது தமிழ்நாட்டின் பொது அமைதிக்கு நல்லதல்ல, இதனால் ஊரு விளையும்," என்று குறிப்பிட்டுள்ளார்.