'ஜனநாயகத்தைக் காப்பாற்ற சாதி, மதங்களைக் கடப்போம்'

'ஜனநாயகத்தைக் காப்பாற்ற சாதி, மதங்களைக் கடப்போம்'

2 mins read
e08aa866-5625-47ff-8e2e-ceb67ba45516
விழா மேடையில் மு.க.ஸ்டாலின், திருமாவளவன். படம்: ஊடகம் -
Google News Preferred Icon

மு.க.ஸ்டாலின்: ஒற்றுமை உணர்வுதான் நம்மை எங்கும், எப்போதும் காப்பாற்றும்

சென்னை: சாதி, மதங்களைக் கடந்து பணியாற்றினால்தான் நாட்டில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னையில் நடைபெற்ற தென்னிந்தியத் திருச்சபை பவள விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், இந்தியா என்பது பல்வேறு மதத்தவர் வாழும் நாடு என்றும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டார்.

"அவரவர் மத நம்பிக்கை என்பது அவரவருக்கு சொந்தமானதே தவிர, மற்றவர்களுக்கு எதிரானதாக இருக்காது. எல்லாருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாதிரி ஆட்சியின் அடிப்படை நோக்கம்.

"எமது அரசு என்பது அனைவரையும் உள்ளடக்கிய அரசுதான். இந்த அரசுக்கு அன்பும் உரிமையும் இரண்டு கண்கள். ஒரு கை உழைக்கவும் இன்னொரு கை உணவூட்டவுமான அரசாக செயல்பட்டு வருகிறோம்.

"எத்தனை நூறு ஆண்டுகள் கடந்தாலும் மக்களுக்கு அன்பை, ஒற்றுமையைப் போதிக்கும் அமைப்பாகவே தென்னிந்தியத் திருச்சபை இருக்கும் என்பதிலும் எனக்கு சந்தேகமில்லை," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

திக்கற்றவர்களுக்கு திசையாக திமுக அரசு செயல்படுகிறது என்றும் அன்பும் உரிமையும் திமுக அரசின் இரு கண்கள் என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.

"ஒற்­றுமை உணர்­வு­தான் நம்மை எங்­கும், எப்­போ­தும் காப்­பாற்­றும். திரா­விட மாதிரி ஆட்­சி­யில் மனி­தர்­கள் அனை­வ­ரும் சமம் என்­பதே சமத்­து­வம். யாரை­யும் வேற்­று­மை­யாகப் பார்க்­காதே என்­பதுதான் சகோ­த­ரத்­து­வம். அனை­வ­ருடனும் சேர்ந்து வாழ் என்­பதுதான் ஒற்றுமை. ஏழை­கள் மீது கருணை காட்டு என்­ப­து­தான் இரக்­கம். அநீ­திக்கு எதி­ரா­கக் குரல் கொடுப்­பதே நீதி. மற்­ற­வர்­க­ளுக்­காக வாதா­டு­வது தியா­கம்," என்­றார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.

அனை­வ­ரும் உல­குக்கு உப்­பாக இருங்­கள். உல­குக்கு ஒளி­யாய் இருங்­கள் என்­பதே தமது அன்­பான வேண்­டு­கோள் என்­றும் அவர் கூறி­னார். இந்­நி­கழ்­வில் கலந்­து­கொண்டு பேசிய விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்­சித் தலை­வர் திரு­மா­வ­ள­வன், ஒட்­டு­மொத்த இந்­தி­யா­வை­யும் அர­ச­மைப்புச் சட்­டத்­தை­யும் பாது­காக்க வேண்­டிய அவ­சி­யம் எழுந்­துள்­ளது என்­றார்.