ஓ.பன்னீர்செல்வம்: பொறுத்திருந்து பாருங்கள்

ஓ.பன்னீர்செல்வம்: பொறுத்திருந்து பாருங்கள்

2 mins read
82da7e65-8b9d-4fe4-b3d6-6a0caab9f220
-

சென்னை: அதி­மு­க­வில் அடுத்து என்ன நடக்­கும் என்­பதை அனை­வ­ரும் பொறுத்­தி­ருந்து பார்க்க வேண்­டும் என ஓ.பன்­னீர்­செல்­வம் தெரி­வித்­துள்­ளார்.

அதி­முக மூத்த தலை­வ­ரான பண்­ருட்டி ராமச்­சந்­தி­ரனை நேற்று நேரில் சந்­தித்த அவர், பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு­கை­யில், மிக விரை­வில் தாம் அனை­வ­ரையும் சந்­தித்­துப் பேச உள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார்.

அதி­மு­க­வில் ஓ.பன்­னீர்­செல்­வம், எடப்­பாடி பழ­னி­சாமி இடை­யே­யான மோதல் வலுத்து வரு­கிறது. இரு தரப்­பி­ன­ரும் நீதி­மன்­றத்தை அணுகி­உள்ள நிலை­யில், ஓபி­எஸ் தரப்பு ஆத­ர­வா­ளர்­களை இபி­எஸ் தரப்பு நீக்­கு­வ­தும் அது­போல் இபி­எஸ் தரப்பு ஆத­ர­வா­ளர்­களை ஓபி­எஸ் தரப்பு நீக்­கு­வ­தும் என தின­மும் ஏதே­னும் ஒரு பர­ப­ரப்­புத் தக­வல் வெளி­யான வவண்­ணம் உள்­ளது.

இந்­நி­லை­யில், முன்­னாள் அமைச்­ச­ரும் அதி­முக மூத்த தலை­வ­ரு­மான பண்­ருட்டி ராமச்­சந்­தி­ரன் அதி­மு­க­வின் அர­சி­யல் ஆலோ­ச­க­ராக நிய­மிக்­கப்­ப­டுவதாக பன்­னீர்­செல்­வம் அறி­வித்­தார். ஆனால் அடுத்த சில மணி நேரங்­களுக்­குள் இந்த நிய­ம­னம் செல்­லாது என்­றும் பண்­ருட்டி ராமச்­சந்­தி­ரன் அதி­முகவை விட்டு நீக்­கப்­ப­டு­வ­தாகவும் பழ­னி­சாமி அறி­வித்­தார்.

இதை­ய­டுத்து நேற்று பண்­ருட்டி ராமச்­சந்­தி­ரனை சந்­தித்­தார் ஓ.பன்­னீர்­செல்­வம். மூத்த தலை­வர் என்ற முறை­யில் அவரைச் சந்­தித்­துப் பேசி­ய­தா­க­வும் முக்­கிய விவ­கா­ரங்­கள் தொடர்­பாக அவ­ரி­டம் ஆலோ­ச­னை­க­ளைப் பெற்­ற­தா­க­வும் ஓபி­எஸ் தரப்பு தெரி­வித்­தது.

"சுமார் ஒரு மணி நேரம் இரு­வரும் ஆலோ­சனை செய்­தோம். அவர் தமது அனு­ப­வங்­க­ளைக் கூறி­னார். அதி­மு­க­வின் தற்­போ­தைய நிலை குறித்து பண்­ருட்­டி­யார் தெரி­விக்­கும் கருத்­து­களை மக்­கள் ரசிக்­கி­றார்­கள். எம்­ஜி­ஆர், ஜெய­ல­லிதா முன்­னெ­டுத்த கொள்கைகளை அவர் மக்­க­ளி­டம் கூறி வரு­கி­றார்.

"பொறுத்­தி­ருந்து பாருங்­கள். அனை­வ­ரை­யும் சந்­திப்­பேன். எம்­ஜி­ஆர், ஜெய­ல­லி­தா­வு­டன் இருந்­த­வர்­களை சந்­தித்து ஆசி பெறு­வோம்," என்­றார் ஓ.பன்­னீர்­செல்­வம்.