தென்கொரிய தமிழர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை

தென்கொரிய தமிழர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை

1 mins read
10261f91-9896-42ad-ae67-5dd07b36eccc
-

சென்னை: தென்கொரிய தலை­நகர் சோலுக்­கும் சென்­னைக்­கும் இடையே நேரடி விமா­னச் சேவைக்கு ஏற்­பாடு செய்ய வேண்­டும் என கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

தொழிற் சந்­திப்­பு­க­ளுக்­காக தென்கொரிய சென்­றுள்ள தமி­ழக தொழில்­துறை அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு, அங்கு கொரிய தமிழ்ச் சங்க பிர­தி­நி­தி­கள், தமிழ் மக்­க­ளைச் சந்­தித்­துப் பேசி­னார். அப்­போது விமா­னச்­சேவை குறித்து மட்­டு­மல்­லா­மல், தென்கொரி­யா­வில் ஆசிய பள்ளி நிறுவ அரசு ஏற்­பாடு செய்ய வேண்­டும் என்­றும் அமைச்­ச­ரி­டம் கோரிக்கை விடுக்­கப்­பட்­டது.

அங்கு இந்­திய தூத­ர­கம் ஏற்­பாடு செய்­தி­ருந்த நிகழ்ச்­சி­யில் பேசிய அமை­ச்சர் தங்­கம் தென்­னரசு, தமிழ்-கொரிய பண்­பாட்டு, வர­லாற்றுத் தொடர்­பு­களை ஆய்வு நோக்­கில் அணுகி ஆராய்ச்சி கட்­டு­ரை­க­ளாக வெளிக்­கொண்டு வரு­வது அவ­சி­யம் என்­றார்.

இது தொடர்­பான ஆய்­வுப்­பணி­களில் ஈடு­ப­டு­வோர் உல­கத் தமிழ்ச் சங்­கம், உல­கத் தமி­ழ­ராய்ச்சி நிறு­வ­னம் உள்­ளிட்ட அர­சின் ஆய்வு நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து செயல்­ப­டு­வது சிறப்­பாக அமை­யும் என்று கேட்­டுக்­கொண்­டார்.

தமிழ் வளர்ச்­சித் துறை மூலம் நடத்­தப்­படும் இணை­ய­வ­ழிக் கல்­விக் கழ­கத்­தின் மூலம் வெளி நாடு­களில் தன்­னார்வ ஆசி­ரி­யர்­க­ளைக் கொண்டு நடத்­தப்­படும் இணை­ய­வ­ழிப் பள்­ளி­களை அமைக்க உதவ வேண்­டும் என்­றும் மிகச்­சி­றந்த ஐம்­பது தமிழ் புத்­த­கங்­களை கொரிய மொழி­யில் வெளி­யிட நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்­றும் அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்­பட்­டது.