காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கிடங்கில் வைக்கப்பட்டிருந்த சமை யல் எரிவாயு உருளைகள் திடீ ரென்று வெடித்துச் சிதறியதில் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்களில் ஆறு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ள தாக ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜா பாத் அருகே உள்ள தேவரியம்பாக்கம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான எரிவாயுக் கிடங்கு ஒன்று செயல்பட்டு வந்தது.
இங்கு 20க்கும் மேற்பட்டோர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஓர் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து வெடித்தது.
இத்தீயானது மற்ற எரிவாயு உரு ளைகள் மீதும் பரவி வெடித்துச் சிதறியதில் அங்கு பணியில் இருந்த பலரும் தீக்காயங்களுடன் அலறி யடித்துக்கொண்டு வெளியில் ஓடிவந்தனர். அருகில் இருந்த கடைகளில் வேலைபார்த்த ஊழியர்களும் பலத்த காயம் அடைந்தனர்.
நேற்று முன்தினம் இரவு நடந்த இவ்விபத்தில் கிடங்கின் உரிமை யாளர் ஜீவானந்தம், 48, பூஜா, 19, கிஷோர், 13, கோகுல், 22, அருண், 22, குணால், 22, சந்தியா, 21, சக்தி வேல், 32, உட்பட 14 பேர் 90% தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களை நேற்று காலை நேரில் பார்த்து அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆறுதல் கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விபத்தில் காயமடைந்த 14 பேரில் ஆறு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் அவர்களை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
"அத்துடன், குடியிருப்புகள் அதிகமுள்ள பகுதியில் இந்த எரிவாயு உருளைக் கிடங்கு எப்படி அமைக்கப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," எனவும் உறுதி அளித்தார்.
சிகிச்சை பெறுபவர்களை நேரில் பார்த்து, அவர்களுக்கு நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். காவல்துறையின் விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதனிடையே, இவ்விபத்து தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவர் அஜய்குமார், அவரது மனைவி சாந்தி, உரிமையாளர் பொன்னிவளவன், மோகன்ராஜ் ஆகியோரிடம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

