ஓர் ஆட்டுக்குச் சொந்தம் கொண்டாடிய இரண்டு பெண்கள்

2 mins read
d8fb7ad6-0a66-42d2-893d-806f3cba8a9f
-

மத்தூர்: ஓர் ஆட்டுக்கு இரு பெண்கள் சொந்தம் கொண்டாடி யதை அடுத்து, இந்தப் புகார் காவல் நிலையத்துக்குச் சென்றது.

ஆட்டினால் பேசமுடியாது என்பதால் இந்தப் பிரச்சினைக்கு எப்படி முடிவு காண்பது என காவல் ஆய்வாளர் குழம்பிப் போனார்.

முடிவில் ஒரு வித்தியாசமான தீர்ப்பை வழங்கி பிரச்சினையை முடித்து வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரைச் சேர்ந்தவர் மலர். இவர் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வரும் நிலையில், அண்மை யில் இவரது ஒருசில ஆடுகள் திருடு போய்விட்டன.

இந்நிலையில், அருகேயுள்ள போச்சம்பள்ளியில் வாரந்தோறும் நடைபெறும் ஆட்டுச் சந்தைக்குச் சென்றவர், யாரேனும் தன் வீட்டில் திருட்டுப்போன ஆடுகளை விற்க வருகிறார்களா என்று சோதித்தார்.

அப்போதுதான், சின்னசாமி என்பவர் பேரம் பேசி நான்கு ஆடு களை வாங்கியிருந்தார்.

அவற்றில் தனது ஆடுகளும் இருப்பதாகக் கூறி மலர் வாக்கு வாதம் செய்தார்.

இதனால் அங்கு ஒரே களே பரமாகிப் போனது.

இதுகுறித்து மத்தூர் காவல்நிலை யத்தில் மலர் புகார் கொடுத்தார்.

இதையடுத்து, தன்னிடம் ஆடு களை விற்பனை செய்த சின்னப் பாப்பாவை அழைத்துக்கொண்டு சின்னசாமி காவல்நிலையம் வந்தார்.

காவர் ஆய்வாளர் முருகனிடம் ஒரே ஆட்டுக்கு இருவர் சொந்தம் கொண்டாடிய பிரச்சினை வந்தது.

இதையடுத்து, புகார் தந்த மலரை ஒருபுறமும், ஆட்டை விற்ற சின்னப்பாப்பாவை ஒருபுறமும் நிற்க வைத்தார். பின்னர் அந்த ஆட்டை அவிழ்த்துவிடச் சொன்னார்.

ஆடு நேராக சின்னப்பாப்பாவிடம் ஓடிச்சென்று அவரை சுற்றிச்சுற்றி வந்தது. பின்னர் அவரின் மடியில் ஆடு படுத்துக்கொண்டது.

இதனால் அந்த ஆடு சின்னப்பாப்பா வளர்த்ததுதான் என்பது உறுதியானது.

இதனால் மலர் வருத்தத்துடன் திரும்பிச் சென்றார். இந்தச் சம்பவம் மத்தூர் பகுதியில் பலரிடமும் பரபரப்பாகப் பேசப்பட்டது.