சென்னை: நாடு முழுவதும் குடிசைகளை அகற்றிவிட்டு அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கும் வகையில் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் 2015ல் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ் தகுதியான பயனாளிகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தருவதற்காக மத்திய, மாநில அரசு சார்பில் பயனாளிகளுக்குத் தலா ரூ.2.75 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் மானியம் வழங்குவதற்காக ரூ.912 கோடி ஒதுக்கப்பட்டு அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் சார்பில் ரூ.547 கோடியும் மாநில அரசின் பங்காக ரூ.365 கோடியும் ஒதுக்கப் பட்டதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.