திமுக பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு ஏகமனதாக தேர்வு கனிமொழிக்குக் கட்சியில் முக்கியப் பொறுப்பு

திமுக பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு ஏகமனதாக தேர்வு கனிமொழிக்குக் கட்சியில் முக்கியப் பொறுப்பு

2 mins read
8b18dbc6-649c-4674-87a1-c137de2335b5
நேற்று நடந்த திமுக கூட்டத்தில் தலைவராக மீண்டும் மு.க.ஸ்டாலின் தேர்வானார். பொதுச் செயலாளராக துரைமுருகனும் (வலது), பொருளாளராக டி.ஆர்.பாலுவும் (இடது) அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்டனர்.படம்: தமிழக ஊடகம் -

சென்னை: திமுக பொதுக்­கு­ழுக் கூட்­டத்­தில் அக்­கட்­சி­யின் தலை­வ­ராக மு.க.ஸ்டா­லின் மீண்டும் தேர்வு செய்­யப்­பட்டார். காலியாக இருந்த துணைப் பொதுச் செய லாளர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை நிய மனம் செய்து முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை கீழ்ப்­பாக்­கம் பச்சை யப்­பன் கல்­லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி வளா­கத்­தில் நேற்று நடை­பெற்ற பொதுக்குழுக் கூட்­டத்­தில், பொதுச் செய­லா­ள­ராக துரைமுரு­க­னும் பொரு­ளா­ள­ராக டி.ஆர். பாலு­வும் போட்­டி­யின்­றித் தேர்வு செய்­யப்­பட்டனர்.

திமு­க­வின் முதன்மைச் செய­லா­ள­ராக கே.என்.நேரு மீண்­டும் தேர்ந்தெடுக்கப்பட்­டுள்­ளார்.

அத்­து­டன், திமுக துணைப் பொதுச்­செ­ய­லா­ள­ராக நிய­ம­னம் செய்­யப்­பட்­டுள்ள ஐவ­ரில் ஒரு­வ­ராக திமு­க­வின் மக­ளி­ர­ணிச் செய லாள­ராக இருந்து வரும் கனி­மொழிக்கும் வாய்ப்பை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

சுப்­பு­லட்­சுமி ஜெக­தீ­சன் தனது பதவியை விட்டு விலகியதைத் தொடர்ந்து, அப்பதவிக்கு கனி­மொழி நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். இது திமுக நிர்வாகிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

கனி­மொ­ழிக்குக் கிடைத்­துள்ள இந்த மிகப்­பெ­ரிய பத­வி­யா­னது அவ­ரது பொறு­மைக்குக் கிடைத்த பரிசு என்று கட்சி வட்­டா­ரத்­தில் பேசப்படு­கிறது.

"கனி­மொழி நினைத்­தி­ருந்­தால் தனக்கு முக்­கிய பத­வி­யைத் தர­வேண்­டும் என பிரச்­சி­னையைக் கிளப்பிவிட்டு பெற்­றி­ருக்கமுடி­யும்.

"ஆனால், தனது திற­மை­யை அங்கீகரித்து கட்சித் தலை­மை பத­வி­யைத் தர­வேண்­டும் என பொறு­மை­யு­டன் கட்­சிக்­காகப் பணி­யாற்­றி­வந்தார். அதற்­கான பலன் இப்­போது கிடைத்­துள்­ளது," என்று கட்சி நிர்வாகிகளில் சிலர் குறிப்­பிட்­டுள்ளனர்.

கனிமொழிக்கான பதவி அறி­விப்பை வெளி­யி­டும்­போது, "டெல்­லி­யில் ஒலிக்­கும் கர்­ஜனை மொழி கனிமொழி திமு­க­வின் புதிய துணைப் பொதுச்செய­லா­ளர்­களில் ஒரு­வ­ராகத் தேர்வு செய்­யப்­ப­டு­கிறார்," என ஸ்டா­லின் அடை­ மொ­ழி­யு­டன் அறிவித்­தார்.

கனி­மொ­ழியைப் போலவே திமு­க­வின் துணைப் பொதுச் செய­லா­ளர்­க­ளாக நிய­ம­னம் செய்­யப்­பட்டுள்ள கூட்­டு­ற­வுத்­துறை அமைச்­சர் ஐ.பெரி­ய­சாமி, உயர்­கல்­வித்­துறை அமைச்­சர் க.பொன்­முடி, திமுக எம்.பி. ஆ.ராசா, அந்­தி­யூர் செல்­வ­ராஜ் ஆகியோரையும் அடைமொழி­க­ளுடன் அழைத்­தார்.

இதனைத்தொடர்ந்து "அப்பா கருணாநிதி இல்லாத இடத்தில் அண்ணன் ஸ்டாலினை வைத்து பார்ப்பதாக கனிமொழி உருக்கமாகப் பேசினார். உங்கள் போராட்டங்கள் அனைத்திலும் பங்கேற்கத் தயாராக உள்ளேன்," என அவர் சொன்னார்.