தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் அறிவிப்பு

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் அறிவிப்பு

1 mins read
b676ba47-5600-4a0c-8941-f5e8280a4eee
-

சென்னை: தீபா­வ­ளியை முன்­னிட்டு பட்­டாசு வெடிப்­ப­தற்­கான கட்­டுப்­பா­டு­களைத் தமி­ழக அரசு அறி­வித்­துள்­ளது. அதன்­படி, காலை 6 முதல் 7 மணி வரை­யும் இரவு 7 முதல் 8 மணி வரை­யும் மட்­டுமே பட்­டா­சு­களை வெடிக்­க­லாம் என மாசு கட்­டுப்­பாடு வாரி­யம் அனுமதி அளித்­துள்­ளது.

அத்துடன், அதிக ஒலி எழுப்­பும், தொடர்ச்­சி­யாக வெடிக்­கக்­கூ­டிய சர­வெ­டி­களைத் தவிர்த்து விடும்படியும் அறிவுறுத்தி உள்ளது.

இது­கு­றித்து, வாரி­யம் வெளி யிட்­டுள்ள அறிக்கையில், தீபா­வளியன்று காலை 6-7 மணி வரை­யும் இரவு 7-8 மணி வரை­யும் பட்­டாசு வெடிக்­க­லாம்.

காற்று மாசு­பாட்டை அதிகம் ஏற்­ப­டுத்­தாக பசுமை பட்­டா­சு களை மட்­டுமே வெடிக்கவேண்­டும். மருத்­து­வ­ம­னை­கள், வழிபாட்­டுத் தலங்­கள், அமைதியாக உள்ள இடங்கள் அருகே பட்­டாசு வெடிப்­ப ­தைத் தவிர்க்­க­வேண்­டும்.

குடிசைப் பகு­தி­கள், எளி­தில் தீப்­பற்­றக்­கூ­டிய இடங்­கள் உள்ள பகுதிகளிலும் பட்­டாசு வெடிப்­பதைத் தவிர்க்கவேண்­டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.