ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் முடிவடைந்தது சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஆ.ராசா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை: திமுக நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் முன்­னாள் தொலைத்­தொ­டர்பு அமைச்­ச­ரு­மான ஆ. ராசா உட்­பட ஐந்து பேர் மீது சொத்­துக் குவிப்பு வழக்­குத் தொடர்­பில் மத்­திய புல­னாய்­வுத் துறை­யான சிபிஐ குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல் செய்­துள்­ளது.

கடந்த 2015ல் ஆ.ராசா வரு மானத்­துக்கு அதி­க­மாக சொத்து சேர்த்­த­தா­கக் கூறி சிபிஐ வழக்­குப் பதிவுசெய்­தது.

ஆ.ராசா, அவ­ரது மனைவி பர­மேஸ்­வரி, உற­வி­னர் பர­மேஸ் குமார், நண்­பர் கிருஷ்­ண­மூர்த்தி, சில தனி­யார் நிறு­வ­னங்­க­ளை­யும் இணைத்து மொத்­தம் 16 பேர் மீது குற்ற வழக்­குப் பதி­வா­னது.

அதா­வது, 1999ஆம் ஆண்டு பார­திய ஜனதா கூட்­டணி அர­சில் அமைச்­ச­ராக இருந்­தது முதல் 2010 வரை­யி­லான கால­கட்­டத்­தில் ஆ.ராசா தன் அமைச்­சர் பத­வி­யைப் பயன்­ப­டுத்தி கூடு­த­லாக 27 கோடியே 92 லட்­சம் ரூபாய் அள வுக்கு வரு­மா­னத்­திற்கு அதி­க­மாக சொத்து சேர்த்­த­தா­க­வும் சிபிஐ குற்­றம்­சாட்­டி­யது.

இப்புகா­ரின் அடிப்­ப­டை­யில் ராசா­வின் வீடு, அலு­வ­ல­கங்களில் சிபிஐ சோதனை நடத்­தி­யது.

டெல்லி, சென்னை, திருச்சி, நீல­கிரி, கோவை உள்­ளிட்ட இடங்­களி­லும் நடத்­தப்­பட்ட சோத­னை­களில் பல்­வேறு முக்­கிய ஆவ­ணங்­கள் கைப்­பற்­றப்­பட்டதாக­வும் சிபிஐ தரப்பில் தெரி­விக்கப்பட்டது.

இந்­நி­லை­யில், ஆ.ராசா மீது போடப்­பட்ட சொத்­துக் குவிப்பு வழக்­கின் விசா­ரணை ஒரு­வ­ழி­யாக முடி­வ­டைந்­ததை அடுத்து, ஏழு ஆண்­டு­க­ளுக்­குப் பின்னர் ராசா உட்­பட ஐவர் மீது சென்னை சிபிஐ சிறப்பு நீதி­மன்­றத்­தில் குற்­றப்பத்­தி­ரிகை தாக்­கல் செய்துள்ளனர்.

அதில், குற்­றம்­சாட்­டப்­பட்ட காலத்­தில் வரு­மா­னத்­தை­விட 579 விழுக்­காடு அதி­க­மாக சொத்து சேர்த்­த­தா­க­வும் ஏறக்­கு­றைய 5 கோடியே 53 லட்­சம் ரூபாய் அள­வுக்கு சொத்­து­க­ளைக் குவித்­தி­ருந் ததாக­வும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்­தக் குற்­றப்­பத்­தி­ரி­கைக்கு எதி­ராக ஆ. ராசா தரப்­பில் மேல்­மு­றை­யீடு செய்யப்பட உள்­ள­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

ஏற்­கெ­னவே, 2ஜி அலைக்­கற்றை ஒதுக்­கீட்டு வழக்­கில் தொலைத் தொடர்பு நிறு­வ­னங்­க­ளுக்கு பெரும் இழப்பை ஏற்­ப­டுத்­தி­ய­தாக ஆ.ராசா மீது சிபிஐ வழக்குத் தொடுத்­தது.

கடந்த 2017ல் சிபிஐ தொடுத்த 2ஜி அலைக்­கற்றை வழக்­கில் இருந்து ஆ.ராசாவை சிபிஐ சிறப்பு நீதி­மன்ற நீதி­பதி ஓ.பி.சைனி விடு­தலை செய்து உத்­த­ர­விட்­டார்.

"2ஜி வழக்­கின் குற்­றப்­பத்­திரி கையில் உண்­மை­யில்லை. தேவை யான சாட்­சி­யங்­கள் நீதி­மன்­றத்­தில் முன்­னி­றுத்­தப்­ப­ட­வில்லை," என்­றும் நீதி­பதி தீர்ப்­பில் கூறி­னார்.

இந்த தீர்ப்­பிற்கு எதி­ராக சிபிஐ டெல்லி உயர் நீதி­மன்­றத்­தில் மேல்­மு­றை­யீடு செய்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!