ஆதரவற்ற 150 சடலங்களைச் சொந்த செலவில் அடக்கம் செய்த காவலர்களுக்குப் பாராட்டு

2 mins read
301ea9c7-0a0b-4e86-ac92-220dfa93116f
வேலையோடு வேலையாக ஆதரவற்றோரின் சடலங்களையும் அடக்கம் செய்துவரும் காவலர்கள் மனோகரன் (இடது ஓரம்), ரகுநாதன். படங்கள்: ஊடகம் -

தஞ்­சா­வூர்: தஞ்­சா­வூ­ரில் கடந்த மூன்று ஆண்­டு­களில் மட்­டும் அர­வ­ணைப்­போர் யாரு­மின்றி ஆதர வற்றவராக இறந்த ஏறக்­குறைய 150 பேரின் சட­லங்­களை சொந்த செலவில் முறை­யான சடங்கு­க­ளு­டன் காவல்­து­றை­யைச் சேர்ந்த இரு­வர் அடக்­கம் செய்­துள்­ள­னர்.

தஞ்­சா­வூர் மருத்­து­வக் கல்­லூரி காவல்நிலை­யத்­தில் சிறப்பு உதவி காவல் ஆய்­வா­ள­ரா­கப் பணி­யாற்­றும் மனோ­க­ரன், 51, கிழக்கு காவல் நிலை­யத்­தில் தலை­மைக் காவ லரா­கப் பணி­யாற்­றும் ரகு­நா­தன், 45, ஆகிய இருவரது பொதுநலச் சேவைகளையும் பொதுமக்­கள் பல­ரும் பாராட்டி வருகின்­ற­னர்.

தஞ்­சா­வூர் மருத்­து­வக் கல்லுாரி மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு வரப்பட்டு உற­வி­னர், நண்­பர்­கள் யாரு­மின்றி ஆதரவற்றவராக உயி­ரிழப்­போ­ரின் சட­லங்­களை இவர்கள் நல்­ல­டக்­கம் செய்து வரு­கின்­ற­னர்.

அண்­மை­யில் தஞ்­சை மருத்­து­வக்­கல்­லுாரி சவக்கிடங்கில் 32 சட­லங்­கள் அடை­யா­ளம் தெரியாமல் உரிமை கோரப்­ப­டா­மல் இருந்­தன.

"சட­லங்­க­ளுக்கு யாரும் உரிமை கோரா­மல் இருந்தால் ஒருவாரத்­தில் அவை அடக்­கம் செய்­யப்­படும்," என அறி­விக்­கப்­பட்­டது.

அதன்­பி­ற­கும் யாரும் உரிமை கோரி வரா­த­தால், மனோ­க­ர­னும் ரகு­நா­த­னும் சேர்ந்து 32 சட­லங் களை­யும் அவ­சர சிகிச்சை வாக­னத்­தில் சாந்­தி­வ­னம் இடுகாட்­டிற்கு கொண்டுசென்று, ஈமச் சடங்­கு­களை முறை­ப்படி செய்து, அடக்­கம் செய்தனர்.

இது­கு­றித்து மனோ­க­ரன் கூறு­கை­யில், "மருத்­து­வக் கல்­லுாரி காவல்நிலை­யப் பணி­யில் சேர்ந்து மூன்று ஆண்­டு­களில் ரகு­நா­த­னு டன் சேர்ந்து சொந்த செல­வில் 150க்கும் மேற்­பட்ட சட­லங்­களை அடக்­கம் செய்­துள்­ளோம்.

"மன்­னார்­கு­டியைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறு­வ­ன­மும் அடக்­கம் செய்­வ­தற்கு உதவி செய்­துள்­ளது. நாங்­கள், இதனை ஒரு சேவை யாகக் கருதியே செய்து வரு­கிறோம்," என்று தெரி­வித்­தார்.