பெண் மரணம்; மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்

பெண் மரணம்; மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்

1 mins read
b5fdbf15-3032-4703-84a6-0495f74077fb
-

கட­லூர்: கையில் அறுவை சிகிச்சை செய்­து­கொண்ட பெண் ஒரு­வர் திடீ­ரென்று உயி­ரி­ழந்த நிலை­யில், அவ­ருக்கு சிகிச்சை வழங்­கிய மருத்­து­வ­ம­னையை அடித்து நொறுக்கி பெண்­ணின் உறவினர்­கள் வாக்­கு­வா­தம் செய்­த­னர்.

இத­னால் காவ­லர்­க­ளுக்­கும் பெண்­ணின் உற­வி­னர்­க­ளுக்­கும் இடையே தள்­ளு­முள்ளு ஏற்­பட்­டது.

கட­லூர் மாவட்­டம், சாவடி பகுதி யைச் சேர்ந்­த­வர் மீனா, 58. இவர், தன் கையில் எலும்பு முறிவு ஏற்­பட்­டதை அடுத்து, கட­லூர் பாரதி சாலை­யில் உள்ள ஒரு தனி­யார் மருத்­து­வ­மனையில் கடந்த சனி­யன்று சிகிச்சை பெறு­வ­தற்­காக அனு­ம­திக்­கப்­பட்­டார்.

பரி­சோ­தனை செய்த மருத்து வர்கள், மீனாவுக்கு அறுவை சிகிச்சை செய்­ய­வேண்­டும் எனக் கூற, அதற்கு உற­வி­னர்­களும் ஒப்­புக்­கொண்­ட­னர்.

இந்­நி­லை­யில், ஞாயி­றன்று கையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மீனா, பொதுப் பிரிவுக்கு மாற்­றப்­பட்­டார்.

அதன்­பி­றகு, உற­வி­னர்­க­ளு­டன் நன்­றா­கப் பேசிக்கொண்­டி­ருந்த மீனா, திங்­க­ளன்று பிற்­ப­க­லில் திடீ­ரென உயி­ரி­ழந்துவிட்­ட­தாக மருத்­து­வ­மனை நிர்­வா­கத்தினர் தெரி­வித்­துள்­ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உற­வி­னர்­கள், "கையில் அறுவை சிகிச்சை செய்­யப்­பட்ட நிலை­யில் திடீ­ரென உயி­ரி­ழக்க வாய்ப்­பில்லை," என வாக்­கு­வா­தம் செய்­த­னர்.

மருத்­து­வ­ம­னை­யின் தவ­றான சிகிச்சை முறையே மீனா­வின் உயி­ரி­ழப்­புக்குக் கார­ணம் என­வும் உற­வி­னர்­கள் குற்­றம்­சாட்­டி­னர்.

மீனா­வுக்குத் திடீர் இத­ய­வலி ஏற்­பட்­ட­தால்­தான் அவர் உயி­ரி­ழந்ததாக மருத்­து­வ­மனை நிர்­வா­கத்­தி­னர் விளக்­கம் அளித்­த­னர்.

இதை ஏற்க மறுத்த உற­வி­னர்­கள் மருத்­துவமனையை முற்­று­கை­யிட்டு அடித்து நொறுக்­கி­னர்.

கட­லூர் புது­ந­கர் காவல்துறையில் இரு தரப்­பி­ன­ரும் தனித்தனி­யாக புகாரளித்த நிலை­யில் விசா­ரணை மேற்­கொள்ளப்பட்டு வரு­கிறது.