கல் நண்டு, கொடுவா மீன் வளர்ப்புக்கு அரசு மானியம் தரும்படி கோரிக்கை

சீர்­காழி: இந்­தி­யா­வி­லேயே முதன்­மு­றை­யாக இளஞ்­செ­ழி­யன் என்ற விவ­சாயி, சீர்­காழி அருகே செயற்­கை­யாக அலை­யாத்தி காடு­களை உரு­வாக்கி அதில் கொடுவா மீன், கல் நண்­டு­களை வளர்த்து அதிக லாபம் ஈட்டி வருவது மக்­க­ளி­டம் நல்ல வர­வேற்­பைப் பெற்­றுள்­ளது.

சுனா­மிக்­குப் பிறகு பல கடற்­கரை கிரா­மங்­கள் தரிசு நிலங்­களாக மாறிவிட்டன என்றும் அங்கே அலை யாத்திக் காடு­களை உரு­வாக்க தமி­ழக அரசு மானி­யம் வழங்கவேண்­டும் என்­றும் இத­னால் ஏரா­ள­மான மக்­களின் வாழ்வாதாரம் பயன் பெறும் என்­றும் இளஞ்­செ­ழி­யன் கோரிக்கை விடுத்­துள்­ளார்.

சென்­னை­யைச் சேர்ந்­த­வர் இளஞ்­செ­ழி­யன். இவர் கடல்­சார் படிப்­பில் முது­நி­லைப் பட்­டம் பெற்­றுள்­ளார். ஒன்றை ஒன்று உட்­கொண்டு வளரும் கடல்­வாழ் உயி­ரி­னங்­களை வளர்க்க ஆர்­வம் கொண்ட இவர், மயி­லாடுதுறை மாவட்­டம், சீர்­காழி அருகே உள்ள புளி­யந்­துறை கிரா­மத்­தில் 15 ஏக்­கர் நிலப்­ப­ரப்­பில் முதலில் இறால் பண்­ணையை உரு­வாக்­கி­னார்.

ஆனால், இறால்­க­ளுக்கு வரும் நோயால் ஏராளமான இறால்கள் அழிந்து இழப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அதே குட்டையில் கொடுவா மீன், கல் நண்டுகளை வளர்க்க ஆரம்­பித்­தார்.

ஆனால், வளர்ந்த கொடுவா மீன்­களும் கல் நண்­டு­களும் தன் குஞ்­சு­களை தானே சாப்­பிட்டு வந்த தால் இந்­தத் தொழி­லும் லாப­மின்றி முடங்­கி­யது.

இந்­நி­லை­யில், அந்­த­மா­னில் உள்­ள­து­போல் அலை­யாத்­திக் காடு களை உரு­வாக்க 1,800 அலை யாத்­திச் செடி­களை வாங்கி வந்து இளஞ்­செ­ழி­யன் நடவு செய்­தார். இந்­தச் செடி­க­ளின் வேர்­க­ளுக்கு இடையே மீன்­களும் நண்­டு­களும் நல்ல வளர்ச்சி அடைந்து, உற்­பத்தி அதி­க­ரித்து உள்­ள­தா­க­வும் அவர் கூறு­கி­றார்.

இது­கு­றித்து இளஞ்­செ­ழி­யன் கூறு­கை­யில், "கொடுவா மீன், கல் நண்­டு­கள் தனது இனத்­தையே அழித்­துச் சாப்­பி­டும் குணம் கொண்­டவை. திறந்­த­வெ­ளி­யில் குட்டை அமைத்து இவற்றை வளர்த்­தால் உற்­பத்தி அதி­கம் இருக்­காது. இது­போன்ற அலை­யாத்­திக் காடு­க­ளின் நடுவே வளர்க்­கும்­போது பெரிய வகை மீன்­கள், கல் நண்­டு­க­ளி­டம் இருந்து சிறிய வகை மீன்­களும் நண்­டு­களும் தங்­க­ளைத் தற்­காத்­துக்­கொள்ள வேர்­களில் சென்று தஞ்­ச­ம­டை­வ­தால் மீன்­க­ளின் வளர்ச்சி அதி­க­ரித்து, உற்­பத்தி அதி­க­ரிக்­கிறது," என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!