தேவர் குருபூசை: பிரதமர் மோடி பங்கேற்க திட்டம்

தேவர் குருபூசை: பிரதமர் மோடி பங்கேற்க திட்டம்

1 mins read
f42cc33b-511d-4357-aa2c-d5bbf0b9b323
-

சென்னை: தமி­ழ­கத்­தில் எதிர்­வ­ரும் 30ஆம் தேதி நடை­பெற உள்ள முத்­து­ரா­ம­லிங்­கத் தேவர் குரு­பூசை­யில் பிர­த­மர் மோடி பங்­கேற்க உள்­ள­தாக பாஜக வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

ஆண்­டு­தோ­றும் ராம­நா­த­பு­ரம் மாவட்­டம், பசும்­பொன்­னில் தேவர் குரு­பூசை நடை­பெற்று வரு­கிறது. இதில் தமி­ழக அரசு சார்­பில் முதல்­வர், அமைச்­சர்­கள் உட்­பட பல்­வேறு அர­சி­யல் கட்­சி­க­ளின் தலை­வர்­கள், பொது­மக்­கள் என ஏரா­ள­மா­னோர் பங்­கேற்­பது வழக்­க­மாக உள்­ளது.

தேவர் நினை­வி­டத்­தில் மரி­யாதை செலுத்த இரு நாள்­க­ளுக்கு முன்பே திர­ளா­னோர் பசும்­பொன்­னில் கூடு­வர்.

கடந்த ஆண்டு தேவர் குரு­பூ­சை­யின்­போது பிர­த­மர் மோடி, முத்து­ரா­ம­லிங்­கத் தேவரை நினைவு­கூர்ந்து தமது டுவிட்­டர் பக்­கத்­தில் பதி­விட்­டி­ருந்­தார்.

"மக்­கள் நல­னுக்­கா­க­வும் சமூக நீதிக்­கா­க­வும் வாழ்­நாளை அர்ப்­ப­ணித்­த­வர் முத்­து­ரா­ம­லிங்­கத் தேவர். துணிச்­ச­லும் கனி­வான உள்­ள­மும் கொண்­ட­வர்," எனப் பிர­த­மர் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், இந்த ஆண்டு தேவர் பூசை­யில் நேரில் வந்து பங்­கேற்­கு­மாறு தமி­ழக பாஜக நிர்­வா­கி­கள் விடுத்த அழைப்பை ஏற்று அவர் தமி­ழ­கம் வர உள்­ள­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.