அண்ணாமலை: பாஜக வளர்ச்சி; தமிழ்நாடு முதல்வர் அதிர்ச்சி

அண்ணாமலை: பாஜக வளர்ச்சி; தமிழ்நாடு முதல்வர் அதிர்ச்சி

1 mins read
e57599de-da53-41c7-9e39-f52c1249a6d1
-

சென்னை: "தமி­ழக முதல்­வ­ருக்கு இரண்டு வித­மான பயம் வந்­தி­ருக்­கிறது. ஒன்று அவ­ரு­டைய கட்­சி­யில் யார் என்ன செய்­வார்­கள்? எப்­போது செய்­வார்­கள்? எப்­படி செய்­வார்­கள்? என்­பது புரி­யா­மல் ஒரு பயத்­தில் இருக்­கி­றார். இரண்­டா­வது பயம் பாஜ­க­வின் வளர்ச்சி," என்று பாஜக மாநி­லத் தலை­வர் அண்­ணா­மலை கூறி­னார்.

அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து சென்னை திரும்­பிய தமி­ழக பாஜக தலை­வர் அண்­ணா­மலை, விமான நிலை­யத்­தில் செய்­தி ­யாளர்­க­ளைச் சந்­தித்­தார். அப்­போது அவ­ரி­டம், மத்­திய அரசு இந்­தியை மீண்­டும் திணிக்க முயற்­சிப்­ப­தாக ஆளுங்­கட்சி உள்­ளிட்ட பல்­வேறு அர­சி­யல் கட்­சி­கள், குற்­றம்­சாட்­டு­வது தொடர்­பாக கேள்வி எழுப்­பப்­பட்­டது.

அதற்கு பதி­ல­ளித்த அவர், "நானும் சில நாள்க­ளாக தமி­ழ­கத்­தில் இருக்­கின்ற ஆளுங்­கட்சி குறிப்­பாக திமு­க­வின் செயல்­பா­டு­க­ளைப் பார்த்­துக் கொண்­டி­ருந்­தேன்.

"எப்­போ­தெல்­லாம் மக்­க­ளுக்கு ஆட்­சி­யின் மீது கோபம் வரு­கி­றதோ, அப்­போ­தெல்­லாம் திமுக தானாக தவ­று­களை செய்து மக்­கள் மன்­றத்­தில் தனக்கு ஓர் அவப்­பெ­யர் ஏற்­ப­டு­கி­றதோ அப்­போ­தெல்­லாம் இந்த இந்தியைக் கையில் எடுப்­பார்­கள். இது புதி­தல்ல. 70 ஆண்­டு­களாக தமி­ழக மக்­கள் இதைப் பார்த்­துக்கொண்டு­ இ­ருக்­கி­றார்­கள்," என்றார்.