மெட்ரோ ரயில்: சுரங்கப் பணி தொடக்கம்; 2026ல் தயார்

சென்னை: சென்­னை­யில் போக்கு­வரத்து நெரி­ச­லைக் குறைப்­ப­தற்­காக மெட்ரோ ரயில் திட்­டம் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. முதல்­கட்ட திட்­டத்­தின்­படி இரண்டு வழித்­த­டங்­களில் மெட்ரோ ரெயில்­கள் இயக்­கப்­பட்டு வரு­கிறது.

நாளுக்கு நாள் மெட்ரோ ரயில்­களில் பய­ணம் செய்­யும் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை கணி­ச­மாக அதி­க­ரித்து வரு­கிறது. இதை­ யடுத்து சென்­னை­யில் புற­ந­கர் பகு­தி­க­ளை­யும் இணைக்­கும் வகை­யில் மெட்ரோ ரயில் 2வது திட்­டத்­துக்கு ஆய்வு செய்­யப்­பட்­டது.

அதில் மொத்­தம் 3 வழித்­த­டங்­களில் மெட்ரோ ரயில் பாதை­கள் அமைக்­க­லாம் என்று முடிவு செய்­யப்­பட்­டது. ஏற்­கெ­னவே இரு வழித்­ த­டங்­கள் உள்ள நிலை­யில் 2வது திட்­டத்­தின் 3வது வழித்­த­டம் 45.8 கி.மீ. தூரம் கொண்­ட­தாக அமைந்து உள்­ளது. 4வது வழித்­த­டம் 26.1 கி.மீ. தூரம் கொண்­ட­தாக அமைந்­துள்­ளது. 5வது வழித்­த­டம் 47 கி.மீ. தூரம் கொண்­ட­தாக இருக்­கும்.

இந்த மூன்று வழித்­த­டங்­க­ளுடன் கூடிய 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்­டத்தை நிறை­வேற்ற மொத்­தம் சுமார் ரூ.62000 கோடி செல­வா­கும். இதற்­கான பணி­கள் ஏற்­கெ­னவே சென்­னை­யில் தொடங்கி விட்­டன.

சென்­னை­யின் முக்­கிய பகு­தி­களில் 2வது கட்ட மெட்ரோ ரயில் உயர்­மட்ட பாதை­கள் அமைப்­ப­தற்­கான பணி­கள் ஆங்­காங்கே தீவி­ர­மாக நடந்து வரு­கின்­றன. உயர்­மட்ட பாதை தவிர 3 வழித்­த­டங்­களி­லும் சுமார் 42.6 கி.மீ. தொலை­வுக்கு சுரங்­கப்­பா­தை­யில் மெட்ரோ ரயில்­கள் இயக்­கப்­பட உள்­ளன.

இந்த 42 கி.மீ. தொலைவு சுரங்கப்பாதை­யில் மொத்­தம் 48 ரயில் நிலை­யங்­கள் உரு­வாக்­கப்­பட இருக்­கின்­றன. சுரங்­கப்­பாதை அமைப்­ப­தற்­கான பணி­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளன.

இதில் 3வது வழித்­த­ட­மான மாத­வ­ரம்-சோழிங்­க­நல்­லூர் வரை­யி­லான பாதை­யில் முக்­கி­ய­மான பணி­யான சுரங்­கம் தோண்­டும் பணி தொடக்க விழா நேற்று மதி­யம் மாத­வ­ரம் பால் பண்ணை பகு­தி­யில் நடந்­தது.

முதல்-அமைச்­சர் மு.க.ஸ்டா­லின் இந்த விழா­வில் கலந்து கொண்­டார். அவர் மாத­வ­ரம் பால் பண்ணை பகு­தி­யில் இருந்து புர­சை­வாக்­கம் கெல்­லீஸ் வரை சுரங்­கம் தோண்­டும் பணியைத் தொடங்கி வைத்­தார். இந்த சுரங்­கங்­களை தோண்­டு­வ­தற்­காக மூன்று வழித்­த­டங்­களி­லும் மொத்­தம் 23 சுரங்­கம் தோண்­டும் எந்­தி­ரங்­கள் பயன்­ப­டுத்­தப்­பட உள்­ளன. வரும் 2026ஆம் ஆண்­டுக்­குள் மெட்ரோ 2ஆம் கட்ட பணி­களை கட்டி முடிக்க திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது என்று மெட்ரோ ரயில் நிறு­வன அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

இந்த 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணி­களில் மாத­வ­ரம் பால் பண்ணை பகு­தி­யில் அமைய இருக்­கும் மெட்ரோ ரயில் நிலை­யம் 3 வழித்­த­டங்­கள் சந்­திக்­கும் மிகப்­பெ­ரிய சந்­திப்­பாக அமைய உள்ளது.

இத­னால் மாத­வ­ரம் பால் பண்­ணை­யில் அமைய இருக்­கும் மெட்ரோ ரயில் நிலை­யம் சுமார் 16 மீட்­டர் ஆழத்­தில் அதி­ந­வீன வச­தி ­களை கொண்­ட­தாக இருக்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!