மதுரை: மாநில அரசின் விளை யாட்டுத் துறைக்கான மூன்று விழுக்காடு வேலைவாய்ப்பில் தாங்கள் சார்ந்துள்ள ஆணழகன் துறையையும் இணைக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த ஆண ழகன்கள் வலியுறுத்தி உள்ளனர்.
முதல்வர் ஸ்டாலினிடம் தங்களது இந்தக் கோரிக்கை குறித்து எடுத் துரைக்கும்படி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனிடம் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
மாநிலம், தேசியம், அனைத் துலக அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிவாகை சூடிய நூற்றுக்கும் மேற்பட்ட ஆணழகன்களில் மத்திய அரசின் ரயில்வே, தபால், வருமான வரி, ராணுவ முப்படை உள்ளிட்ட துறை களில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ள நிலையில், தமிழக அரசும் ஆணழகன் துறைக்குரிய வேலைவாய்ப்புகளை வழங்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

