'மைதான விளையாட்டு மறக்கப்பட்டு வருகிறது'

'மைதான விளையாட்டு மறக்கப்பட்டு வருகிறது'

1 mins read
0ef61e4c-dd77-4749-a585-11ed4e6e34ed
-

மதுரை: இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாவது இளம் தலைமுறையினர், குழந்தைகள் இடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வேதனை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு ஒன்றில் நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவில், "பப்ஜி, ப்ரீபயர் போன்ற தடை செய்யப் பட்ட இணைய விளையாட்டு களுக்கு மாணவர்கள், சிறுவர்கள், இளம்தலைமுறை யினர் அடிமையாகி வருவதால் மைதானத்துக்குச் சென்று விளையாடுவதையே அவர்கள் மறந்துவிட்டனர். பெற்றோர், குழந்தைகள் மனம்விட்டுப் பேசிக் கொள்வதே இல்லை. இதுபோன்ற விளையாட்டு களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நீதிமன்றத் தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்," என நீதிமன்றம் உத்தரவிட்டது.