தமிழ் நாட்டின் ஐந்து சிலைகள் அமெரிக்காவில்

தமிழ் நாட்டின் ஐந்து சிலைகள் அமெரிக்காவில்

1 mins read
3d5a4d10-a60d-4e0b-962b-5caba5ef8ba2
அமெ­ரிக்க அருங்­காட்சி­ ய­கங்களில் உள்ள­ யோக நரசிம்மர், விநாயகர் சிலைகள். படங்கள்: ஊடகம் -
multi-img1 of 2

திரு­வா­ரூர்: திரு­வா­ரூர் மாவட்­டத் தில் உள்ள கோயி­லில் இருந்து 50 ஆண்­டு­க­ளுக்கு முன்பு கள­வு­போன ஒன்­பது சிலை­களில் ஐந்து சிலைகள் அமெ­ரிக்க அருங்­காட்சியகங்­களில் இருப்­பது தெரியவந்­துள்­ள­தாக சிலைக் கடத்­தல் தடுப்­புப் பிரிவு காவ­லர்­கள் அறி­விப்பு வெளி­யிட்­டுள்­ள­னர்.

திரு­டப்­பட்ட பழங்­கா­லச் சிலை­களை அமெ­ரிக்க அருங்­காட்­சி­யகங்­களில் இருந்து மீட்­டெ­டுப்­ப­தற்­கான ஆவ­ணங்­களையும் அதிகாரி கள் சமர்ப்­பித்துள்ளனர்.

திரு­வா­ரூர் மாவட்­டம், ஆலத்­தூ­ரில் உள்ள வேணு­கோ­பால சுவாமி கோயி­லில் இருந்து திரு­டப்­பட்ட பழங்­கால விஷ்ணு, பூதேவி, ஸ்ரீதேவி, யோக நர­சிம்­மர், விநா­ய­கர் சிலை­கள் அமெ­ரிக்­கா­வின் மிசோரி, கன்­சாஸ், நெல்­சன்-அட்­கின்ஸ் அருங்­காட்­சி­ய­கங்­ களில் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டி­ருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

கோவி­லில் இருந்து 50 ஆண்­டு­க­ளுக்கு முன்பு இந்த உலோ­கச் சிலை­கள் திரு­டப்­பட்டு அதற்குப் தி­லாக போலிச் சிலை­கள் பிரதி எடுக்­கப்­பட்டு வைக்­கப்­பட்­டுள்ளதாக வும் கூறப்படுகிறது.

களவு போன சிலை­கள் குறித்த புகைப்­ப­டங்­கள் புதுச்­சே­ரி­யில் உள்ள பிரெஞ்ச் அலு­வ­ல­கத்­தில் கிடைத்ததை அடுத்து, அவற்றின் உத­வி­யு­டன் சிலை­களை மீட்க ஆவ ­ணங்­கள் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த ஆவ­ணங்­களின் மூலம் காணாமல்போன ஒன்பது சிலை­களில் ஐந்து சிலை­கள் அமெ­ரிக்­கா­வில் உள்ள அருங்­காட்­சி­ய­கங்­களில் இருந்து விரைவில் மீட்க உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று சிலைக் கடத்­தல் தடுப்புப் பிரிவு காவலர்கள் கூறி­யுள்ளனர்.

மீதமுள்ள நான்கு சிலை­களும் அமெ­ரிக்­கா­வில்­ உள்­ளதா என்றும் தொடர் விசா­ரணை நடத்தப்பட்டு வருகிறது.