ஊதலை விழுங்கி உயிரிழந்த குழந்தை

ஊதலை விழுங்கி உயிரிழந்த குழந்தை

1 mins read
dbc46205-166b-4abe-839d-aabc62a0f16d
-

திருவள்ளூர்: பூந்தமல்லி அருகே, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு வயதுக் குழந்தை ஊதலை விழுங்கியதில் உயிரிழந்தது.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ்-வனஜா தம்பதிக்கு மூன்று வயதில் மகனும் ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில், வழக்கம்போல் பெண் குழந்தை வீட்டில் விளையாட்டுப் பொருட்களுடன் விளையாடிக்கொண்டிருந்த போது, அருகில் கிடந்த ஊதலை எடுத்துச் சப்பி, அதனை விழுங்கியுள்ளது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை கயல்விழி மயங்கியுள்ளது.

இதனைக்கண்டு அதிர்ந்த பெற்றோர் உடனே குழந்தையைத் தூக்கி முதுகில் தட்டியபோது வாயில் இருந்து ஊதல் கீழே விழுந்தது. இதன்பின்னரே பெற்றோருக்கு உண்மை தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.