தீபாவளிக்கு பணம் தராததால் குப்பையை கொட்டிய ஊழியர்

தீபாவளிக்கு பணம் தராததால் குப்பையை கொட்டிய ஊழியர்

1 mins read
08418f3d-a2ef-44af-9aeb-61eec7b6cfea
-

கோவை: கோவை ஆர்.எஸ். புரம் ராமச்­சந்­திரா சாலை­யில் ஜேம்ஸ் என்­ப­வர் எல்­இடி கடை நடத்தி வரு­கி­றார். இவ­ரி­டம், கடந்த 4ஆம் தேதி தூய்­மைப் பணி­யா­ளர் ஒரு­வர் தீபா­வ­ளிச் செல­வுக்கு பணம் தரும்­படி கேட்­டுள்­ளார். "இப்­போது பணமில்லை, வரும் 20ஆம் தேதிக்கு மேல் தரு­கி­றேன்," என ஜேம்ஸ் கூறி­யுள்­ளார். அதன்பிற­கும், தூய்­மைப் பணி­யா­ளர் ரூ. 500 கேட்டு தொந்­த­ரவு செய்­யவே இரு­வ­ருக்­கும் இடையே வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், கடந்த 5ஆம் தேதி தூய்­மைப் பணி­யா­ளர் ஒரு­வர் குப்­பையைக் கொண்டு வந்து ஜேம்ஸ் கடை­யின் முன்பு கொட்­டும் காட்­சி­கள் அந்தப் பகுதியில் இருந்த சிசி­டிவியில் பதிவாகி, இப்போது சமூக வலைத் த­ளங்­களில் பரவி வரு­கிறது.

இதுபோல், பணம் தராதவர் களின் கடைக­ள் முன்பு ஒரு சில தூய்­மைப்பணி­யா­ளர்­கள் குப்­பை­யைக் கொட்டிச் செல்­வதை வாடிக்­கை­யாக வைத்திருப்பதாக வியா­பா­ரி­கள் குற்­றம்­சாட்­டு­கின்­ற­னர்.