வலசை வரும் பறவைகள் அதிகரிப்பு

வலசை வரும் பறவைகள் அதிகரிப்பு

1 mins read
1ca3bf41-0e13-4210-a4a2-d2d6c7b760f4
-

வேளச்­சேரி: பள்­ளிக்­க­ரணை சதுப்பு நிலப்­ப­குதி வேளச்­சேரி முதல் மேட­வாக்­கம் வரை 1,730 ஏக்­க­ரில் பர­வி­யுள்­ளது. இங்கு அரிய வகை உள்­ளூர்ப் பறவை களும் பல்­வேறு நீர்­வாழ் உயிரி னங்­களும் காணப்­ப­டு­கின்­றன.

இந்த அக்­டோ­பர் மாத இறுதி யில் இப்­ப­கு­திக்கு வரும் பறவை களின் எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இப்­ப­கு­திக்கு வெளி­நா­டு­களில் இருந்து வரும் பற­வை­களில் பேதை உள்­ளான், ஐரோப்பா, ரஷ்ய நாட்­டில் உள்ள மஞ்­சள் வாலாட்டி, நீலச்­சி­றகு வாத்து, தட்­டை­வா­யன், பூனைப்­பருந்து, ஜப்­பான், சீனாவில் காணப்­படும் தலை ஆள்­காட்டி உள்­ளிட்ட 50 வெளி­நாட்­டுப் பற­வை­கள் ஆண்டு­தோ­றும் வலசை வந்து செல்வது வழக்கம்.